ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பயன்படுத்துவதே ஒரு ஸ்டேட்டஸ் ஆக கருதப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் எப்போது புது போனை அறிமுகம் செய்தாலும் அதன் அம்சங்கள் மற்றும் விலை மீது தான் ஸ்மார்ட்போன் பிரியர்களின் கவனம் இருக்கும்.
ஐபோன் பிரியர்கள் பொதுவாக புது போன் அறிமுகம் செய்யப்பட்டால் உடனே வாங்கி பயன்படுத்துவிடுவர். அப்படி ஐபோன் 15 ஐ குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது.

ஆப்பிளின் பிரீமியம் ஸ்மார்ட்போனான ஐபோன் 15 இந்தியாவில் செப்டம்பர் 2023 மூன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ஐபோன் 15 அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரி வகைகளுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக 128 ஜிபி வேரியண்ட் ரூ. 79, 990 க்கு விற்கப்பட்டது. 256 ஜிபி வேரியண்ட் ரூ.89,990 க்கும், 512 ஜிபி வேரியண்ட் ரூ. 1,09,990 க்கு விற்கப்பட்டது.
அவ்வப்போது ஈ-காமர்ஸ் தளங்கள் திடீரென ஐபோன் விலையை குறித்து தள்ளுபடிகளை வழங்கும். அந்த வகையில் ஐபோன் 15க்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது பிளிப்கார்ட் தளம். புதிய தள்ளுபடிகள் மூலம் ஐபோன் 15 ஐ ரூ.41,000க்கு கீழ் வாங்க முடியும்.
ஐபோன் 15இன் 128 ஜிபி வேரியண்டிற்கு தற்போது சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பிளிப்கார்ட் தளத்தில், ஐபோன் 15இன் 128ஜிபி வேரியண்டை ரூ. 40,297 க்கு வாங்கலாம். இதன் உண்மை விலை ரூ. 79,900.
பிளிப்கார்ட் தளம் இதற்கு ரூ. 10,900 தள்ளுபடி அளிக்கிறது. பழையன் ஐபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம், உங்களுக்கு ரூ.29,000 கிடைக்கும். எனவே ஐபோன் 15ஐ நீங்கள் ரூ.41,000க்கு கீழ் வாங்க முடியும்.
ஐபோன் 15 பல்வேறு நவீன அம்சங்களுடன் வந்துள்ள ஒரு ஸ்மார்ட்போன். 6.1 இன்ச் டிஸ்ப்ளேவும் மிகச் சிறந்த பர்பாமன்ஸ் கொண்ட போனாகவும் இது அறியப்படுகிறது. இதன் பிரைமரி கேமரா 48 மெகாபிக்சல் கொண்டது அதனுடன் குவாட் பிக்சல் சென்சாரும் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல கூடுதலாக இதில் 24 மெகாபிக்சல் சூப்பர் ஹை ரெசல்யூஷன் கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் எடுப்பதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ள இந்த போன், யூஎஸ்பி - சி போர்ட் வகை கொண்டது என்பதால் சி போர்ட் சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்யலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏ16 பயோனிக் சிப் கொண்ட இந்த போன் பயனாளர்களுக்கு சிறந்த ஒரு அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கிறது.
story written by: Devika


Click it and Unblock the Notifications