புது போன் வாங்க திட்டமிடுவோர் அனைவருக்கும் இன்று பொன்னான நாள் என்று தான் சொல்ல வேண்டும், எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு பிளாக் ஃப்ரைடே விற்பனை மிகவும் பிரம்மாண்டமாக இந்தியாவில் துவங்கியுள்ளது. அதிலும் முக்கியமான அமெரிக்காவில் நடப்பது போல் காஸ்ட்லியான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பெரும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் வாங்க அல்லது பழைய ஐபோனை மாற்றுவோருக்கும், ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு மாற திட்டமிடுவோர், ஐபோனுக்கு சிறந்த சலுகைகளுக்காகக் காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த பிளாக் ஃப்ரைடே ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

க்ரோமா நடத்தும் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் iPhone 16-ஐ வெறும் 39,990 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவ்வளவு பெரிய தள்ளுபடி எப்படி சாத்தியம்?
க்ரோமா இணையதளத்தில் iPhone 16-இன் தற்போதைய விலை 66,490 ரூபாய் என்று காட்டப்படுகிறது. இது ஐபோன் 16-னின் வெளியீட்டு விலையான 79,900 ரூபாயைவிட இது 13,410 ரூபாய் குறைவு. இதனுடன் கூடுதலாக 1,500 ரூபாய் வரையிலான கூப்பன் தள்ளுபடியும், வங்கி சலுகையாக 3,000 ரூபாயும் கிடைக்கிறது.
மேலும் பழைய போனை கொடுத்தால் 6,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உண்டு. சில பழைய மாடல்களுக்கு 16,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் கிடைக்கும். இவை அனைத்தையும் சேர்த்து பார்த்தால் iPhone 16-இன் இறுதி விலை 39,990 ரூபாயாகக் குறைகிறது.
இந்த விலையில் iPhone 16 வாங்கலாமா?
39,990 ரூபாய்க்கு iPhone 16 கிடைப்பது மிகவும் கவர்ச்சிகரமான சலுகைதான். இந்த விலையில் உங்களுக்கு ஐபோனின் புதிய A18 சிப், சிறந்த கேமரா, நீண்ட பேட்டரி ஆயுள், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. இது தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் சிறந்த தேர்வு.
ஆனால் க்ரோமாவிலேயே iPhone 17-ஐ 45,990 ரூபாய்க்கு வாங்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களூட்டில் கொஞ்சம் அதிகமாகச் செலவு செய்ய முடியுமானால் iPhone 17-ஐத் தேர்ந்தெடுப்பது நல்லது, ஏனென்றால் அது இன்னும் புதிய தொழில்நுட்பத்துடன் வரும்.
இப்போதே வாங்க வேண்டுமா, கொஞ்சம் காத்திருக்கலாமா?
பிளாக் ஃப்ரைடே சலுகைகள் பொதுவாக ஸ்டாக் முடியும் வரை அல்லது சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். எனவே iPhone 16-ஐ 39,990 ரூபாய்க்கு வாங்க விரும்பினால் உடனடியாக முடிவு செய்ய வேண்டும். பழைய போனின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பை அதிகமாகப் பெற விரும்பினால் அதையும் உடனே சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த விலையில் ஐபோன் கிடைப்பது அரிதான வாய்ப்பு தான். இதைத் தவறவிட்டால் அடுத்த பெரிய சலுகைக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
க்ரோமாவின் இந்த பிளாக் ஃப்ரைடே சலுகை, ஐபோன் வாங்க விரும்பும் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. 39,990 ரூபாய்க்கு iPhone 16 கிடைப்பது என்பது சாதாரண மாத வருமானம் உள்ளவர்களுக்கும் ஐபோன் கனவை நனவாக்கும் வாய்ப்பாக உள்ளது. இந்த சலுகையைப் பயன்படுத்தி புதிய ஐபோனுடன் புத்தாண்டைக் கொண்டாடலாம்.


Click it and Unblock the Notifications