சமீபத்தில் ஐபோன் 16 அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த கடைகள், பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்கள் என பலவற்றிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உயர் ரக ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்பவர்கள் 10 நிமிடங்களுக்குள் ஐபோன் 16-ஐ பெரும் வகையில் டெலிவரி செய்ய பிக் பாஸ்கெட், செப்டோ மற்றும் பிளிங்கிட் போன்ற விரைவு டெலிவரி தளங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. தற்போது ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 மாடல்களுக்கும் ஈ-காமர்ஸ் தளங்களில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஐபோன் 13 மாடலை மாற்றி ஐபோன் 16 மொபைல் வாங்க விருப்பப்படும் பயனர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.28,500 எக்ஸ்சேஞ்ச் மதிப்பை வழங்குகிறது. ஆனால் அதற்கு உங்களுடைய போன் குறைபாடற்ற நிலையில் இருக்க வேண்டும். மேலும் இதற்குக் கூடுதலாக ரூ.3000 ரூபாய் போனஸ் கிடைக்கும். இதனால் ஐபோன் 16 விலை ரூ.51,000 ரூபாயாக குறைகிறது. அதுவே ஐபோன் 12 மாடலை வைத்து ஐபோன் 16 வாங்கவிருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 எக்சேஞ்ச் மதிப்பைப் பெறலாம். ஆப்பிளின் அதிகாரபூர்வ ஸ்டோர்களில் ஐபோன் 13 மாடலுக்கு 25,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர்களோடு ஒப்பிடுகையில் பிளிப்கார்ட் நிறுவனம் 3500 கூடுதல் மதிப்பு மற்றும் 3000 கூடுதல் போனஸும் கிடைக்கிறது.

ஆப்பிளின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனான ஐபோன் 16 மாடல் ஸ்ட்ராங்கான டைட்டானியம் பாடியை கொண்டுள்ளது. 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஹெக்ஸா-கோர் ஆப்பிள் A18 மூலம் இயக்கப்படுகிறது. 8GB RAM உடன் வருகிறது. மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது . ஃபோனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்ஃபிக்களுக்காக 12எம்பி முன்பக்க கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.
iOS 18 மூலம் இயங்குகிறது. ஐபோன் 16 ஆனது 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு விருப்பங்களை வழங்குகிறது. டூயல் சிம் வசதியை வழங்குகிறது மேலும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியையும் கொண்டுள்ளது. இதனால் தண்ணீரில் விழுந்தாலும் போனுக்கு எந்த சேதமும் ஏற்படாது. இணைப்பு விருப்பங்களில் வைஃபை 6, ஜிபிஎஸ், புளூடூத் 5.3, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி மற்றும் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி ஆகியவை அடங்கும். இது கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, டீல் மற்றும் அல்ட்ராமரைன் வண்ணங்களில் கிடைக்கிறது.
தற்போது பிளிப்கார்ட்டில் வழங்கப்படும் இந்த தள்ளுபடி உயர் ரக ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க எண்ணும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக மாறியுள்ளது. எனவே பயணர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications