உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபோன் 18 சீரியஸ் போன்களின் அறிமுகம் நிகழ்ச்சி செப்டம்பர் 9ஆம் தேதி நடக்க உள்ளது, ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ வாக இருந்த டிம் குக் இப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் தலைமையில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் பல அதிரடி அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 18 சீரியஸ் போன்களின் அறிமுகத்திற்கு முன்பு முந்தைய சீரியஸான ஐபோன் 17 போன்களின் விலை அதிரடியாக குறைய துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் வரும் போது பழைய ஐபோன்களை வேகமாக விற்க வேண்டும் என்பதற்காக குறைப்பது வழக்கம். இதன் படி இந்த வருடமும் உலகம் முழுவதும் ஐபோன் 17 சீரியஸ் போன்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக பிரிட்டன் நாட்டில் ஐபோன் 17 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் போன்களின் விலை 150 பவுண்ட் வரையில் விலை குறைக்கப்பட்டு உள்ளது. பேஸ் மாடலான ஐபோன் 17 மாடல் விலை 100 பவுண்ட் வரையில் குறைந்துள்ளது. ஐபோன் ஏர் 512ஜிபி 200 பவுண்ட் வரையில் குறைந்துள்ளது. இதை தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளிளும் ஐபோன் 17 சீரியஸ் போன்களின் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இப்போ இந்தியாவில் எவ்வளவு விலை குறைந்துள்ளது என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்திய ஐப்பிள் தளத்தில் ஐபோன் 17 ப்ரோ மாடல் 82,900 ரூபாய்க்கு தொடர்ந்து விற்கப்பட்டாலும் பிளிப்கார்ட் தளத்தில் 2000 ரூபாய் குறைத்து 80,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதை தொடர்ந்து கிரெடிட் கார்டு ஆஃபர், பழைய ஐபோன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வங்கி ஆஃபர் என பல்வேறு ஆஃபர்களை சேர்த்தால் ஒருவர் 53,817 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆப்பிளின் இந்திய இணைய தளத்தில் ஐபோன் 18 சீரியஸ் போன்களின் அறிமுகத்தை முன்னிட்டு எவ்விதமான பெரிய விலை தள்ளுபடியும் கொடுக்காவிட்டாலும், அதன் புதிய போன்களின் அறிமுகத்திற்கு பின்பு வரலாம் என கருத்து நிலவுகிறது.
ஐபோன் 18 சீரியஸ் போன்களில் வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனம் பேஸ் மாடல் மற்றும் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தாலும், அதை தாண்டி தற்போது ப்ரீமியம் பிரிவில் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் Fold மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என பெரிய அளவிலான எதிர்பார்ப்பு உள்ளது.
இதை தொடர்ந்து ஆப்பிள் போன்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் போன்ற இதர புதிய தொழில்நுட்ப சேவையில் எத்தகைய இன்னோவேஷன்களை கொண்டு வரப்போகிறது என்பது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் உள்ளது.
ஸ்மார்ட்போன்ற தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹூவாய் ஆகட்டும், கொரியாவின் சாம்சங் ஆகட்டும் இரண்டும் பல பரிமானங்களில் முன்னேறியுள்ளது. இப்படியிருக்கையில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் ஆதிக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
