சந்தையில் பல முன்னணி பிராண்டுகள் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தாலும், ஆப்பிள் ஐபோனுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. ஆப்பிள் ஐபோன் கையில் இருந்தால் கெத்தாக உணரும் ஐபோன் பிரியர்களுக்கு வரவிருக்கும் புதிய மாடல் பல சர்ப்ரைஸ்களை தரவிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ மாடலை வெளியீட இருக்கிறது. இதற்கிடையில் இணையவாசிகள் மத்தியில் வரவிருக்கும் புதிய மாடல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபோன் 18 ப்ரோ மாடல் சிறந்த கேமரா, அழகான டிசைன், டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நேரம் நீடித்திருக்கும் பேட்டரி போன்றவற்றுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டிசைன்: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து கிடைக்க தகவல் படி தற்போது வரவிருக்கும் புதிய மாடலில் சில நுணுக்கமான விஷயங்கள் செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஐபோன் டிஸ்ப்ளேவின் மேல் பகுதி ஒரு மாத்திரை வடிவில் இருக்கும். இது தற்போதுள்ள மாடல்களில் தெரியும். ஆனால் இனி வரவிருக்கும் ஐபோன் 18 புரோ மாடலில் இதன் அளவை 35 சதவீதம் வரை குறைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் போனின் ஸ்கிரீன் பார்ப்பதற்கு இன்னும் பெரியதாகவும், வீடியோக்கள் பார்க்கும்போது எந்த இடையூறும் இல்லாத வகையில் இருக்கும்.

டிஸ்ப்ளே மட்டுமல்ல போனின் பின்புறத்திலும் சில மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் செய்யவிருக்கிறது. போனின் பின்புறத்தில் இருக்கும் கிளாஸ் மற்றும் மெட்டல் பாடி ஆகியவற்றை அழகாக வடிவமைத்து கையில் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும் வகையில் வடிவமைத்து வருகிறது. ஐபோன் 18 ப்ரோ மாடல் டார்க் செர்ரி, ஸ்கை ப்ளூ, சில்வர், டார்க் கிரே போன்ற புதிய நிறங்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேமரா: ஐபோன் 18 ப்ரோ மாடலில் "வேரியபிள் அப்பர்ச்சர்" (Variable Aperture) எனும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் லென்சிற்குள் எவ்வளவு வெளிச்சம் செல்ல வேண்டும் என்பதை நாமே மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதனால் இரவு நேரங்களில் புகைப்படம் மற்றும் போர்ட்ரைட் படங்களை துல்லியமாக எடுக்கலாம்.
இதை தவிர ஜூம் செய்து போட்டோ எடுக்கும் போது எடுக்கும் புகைப்படத்தின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக "டெலி கன்வெர்ட்டர்" போன்ற ஜூம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுள்ளது.
டிஸ்ப்ளே: ஐபோன் 18 ப்ரோ மாடலில் புதிய A20 Pro சிப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது மொபைல் பார்க்கும் போது வசதியாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், பேட்டரி பவர் நீண்ட நேரம் இருக்கவும் உதவியாக இருக்கும், அதேபோல ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன நானோ மீட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் போனின் வேகம் முன்பை விட அதிகமாக இருக்கும் என்றும், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் போன்ற AI அம்சங்களை கையாளவும் உதவியாக இருக்கும்.
பேட்டரி: நீண்ட காலமாக ஐபோன் பிரியர்களுக்கு பேட்டரி லைஃப் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் 18 ப்ரோ மாடலில் 5,000mAh-க்கும் அதிகமான பேட்டரி திறன் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications