தைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..!

இந்தியாவை மாபெரும் உற்பத்தி தளமாக மாற்ற வேண்டும் என்ற பெரும் திட்டத்தின் முதல் பகுதியாக இந்தியாவை அடுத்த 5 வருடத்தில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலகின் மையப்புள்ளியாக மாற்ற வேண்டும் என அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது மத்திய அரசு.

இதன் மூலம் ஸ்மார்ட்போன் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது பெரிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான பெகாட்ரன் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 1,100 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கா- சீனா

அமெரிக்கா- சீனா

2019ஆம் ஆண்டில் அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்ட நேரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு மொத்தமாக வெளியேற நேரடியாக உத்தரவிட்டார். இதனால் சீனாவில் உற்பத்தி தளத்தை அமைந்திருந்த பல நிறுவனங்கள் தென் ஆசிய நாடுகளுக்குப் பறந்தது.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

சீனாவில் உற்பத்தி பணிகளுக்குக் குறைந்த சம்பளத்தில் அதிக ஊழியர்கள் கிடைக்கும் காரணத்தால் பல டெக், கேஜெட் மற்றும் ஆட்டொமொபைல் நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் கட்டமைத்தது. ஆனால் அமெரிக்கா - சீனா இடையேயான நட்புறவு ஸ்திரமாக இல்லாத காரணத்தால் இருநாடுகள் மத்தியிலும் வர்த்தகப் பிரச்சனை வெடித்தது

திட்டம் தீட்டிய இந்தியா

திட்டம் தீட்டிய இந்தியா

இதன் வாயிலாகவே டொனால்டு டிரம்ப் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களைச் சீனாவை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அப்படிச் சீனாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க ஈர்க்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து விரைவில் உற்பத்தியைத் துவங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்தது.

இந்தியாவுக்கு ஜாக்பாட்

இந்தியாவுக்கு ஜாக்பாட்

இதனால் பல துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவிற்குப் படையெடுத்தது. அப்படிச் சீனாவில் இருந்து வெளியேறிய மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஆப்பிள், கடந்த ஒரு வருடத்தில் சீனாவில் இருந்து சுமார் 9 ஸ்மார்ட்போன் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது.

ஆப்பிள் - பெகாட்ரன்

ஆப்பிள் - பெகாட்ரன்

பெகாட்ரன் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க 150 மில்லியன் டாலர் அதாவது 1,100 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்த நிலையில், தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

2021 முதல் துவக்கம்

2021 முதல் துவக்கம்

இந்த ஒப்புதல் மூலம் தொழிற்சாலையை அமைக்கும் பணியை வேகமாகத் துவங்க உள்ள பெகாட்ரன் 2021 பிற்பகுதி அல்லது 2021 முற்பகுதியில் உற்பத்தியைத் துவங்க உள்ளது எனப் பெகாட்ரன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான Liao Syh-jang தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை

தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் பெகாட்ரன் சென்னையில் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவில் அமைத்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

 

3 நிறுவனங்கள்

3 நிறுவனங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் 3 உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பெகாட்ரன், பாக்ஸ்கான், விஸ்திரான் ஆகிய மூன்றும் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதில் பெகாட்ரன் முழுவதும் ஆப்பிள் கருவிகளை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலையில் பாக்ஸ்கான், விஸ்திரான் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சியோமி போன்ற நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட்போன் தயாரிக்கிறது.

PLI திட்டம்

PLI திட்டம்

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்ற திட்டத்துடனே மத்திய Production-Linked Incentive (PLI) என்ற திட்டத்தை உருவாக்கியது. இது கொரோனா பாதிப்பால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் பயன்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+