கத்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் பேசினேன். ஆப்பிள் ஐபோன்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பதிலாக அமெரிக்காவில் அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தேன் என்று கூறினார்.
டிரம்ப்
டிரம்பின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபரின் பேச்சை கேட்டு இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தியை ஆப்பிள் குறைத்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால், இந்தியா தங்களது முக்கிய உற்பத்தி தளமாக தொடர்ந்து நீடிக்கும் என்று ஆப்பிள் நிர்வாகிகள் உறுதிபட கூறியதாக தகவல் வெளியானது. அதேசமயம், அமெரிக்காவில் ஐபோன்களை தயாரித்தால் அந்நாட்டவர்களே அதை வாங்குவார்களா என்பது சந்தேகம்தான் அதனால் இந்தியாவிலிருந்து ஐபோன் உற்பத்தியை வேறு இடத்துக்கு மாற்ற வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மராத்தா வர்த்தகம், தொழில்கள் மற்றும் வேளாண்மை சபையின் இயக்குனர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன் கூறுகையில், ஆப்பிள் நிறுவனத்திலும், அமெரிக்க அரசு நிர்வாகத்திலும் சிறந்த யோசனைகள் நிலவும். அவர்கள் பின்வரும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். முதலாவது, சீனா, இந்தியா அல்லது வியட்நாமை தவிர்த்து அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்க முடிவு செய்தால், 1,000 டாலர் ஐபோனின் விலை 3,000 டாலர்களாக அதிகரிக்கும். அந்த ஐபோனை 3,000 டாலர் கொடுத்து அமெரிக்க வாடிக்கையாளர்கள் வாங்க தயாராக இருப்பாங்களா?.
வேலைவாய்ப்பு
ஆப்பிளின் 80 சதவீத உற்பத்தி சீனாவில் நடைபெறுகிறது. அங்கு சுமார் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. உற்பத்தி மற்றும் வேலைகள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயரவில்லை. அவை சீனாவிலிருந்து நம் நாட்டுக்கு இடம் பெயருகின்றன. இதனால் ஆப்பிள் பன்முகப்படுத்தப்பட்ட விநியோக சங்கிலியை கொண்டிருக்கும், மேலும், அமெரிக்க நிறுவனங்களும் நுகர்வோரும் வர்த்தகத்தின் அடிப்படையில் அவர்களுடன் மிகவும் நட்பாக இல்லாத ஒரு நாட்டின் மேலாதிக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
கேபிஎன்ஜி நிறுவனத்தின் முன்னாள் கூட்டாளியான ஜெய்தீப் கோஷ் கூறுகையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவில் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் தயாரிக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரானது. அமெரிக்காவில் ஐபோன்கள் உற்பத்தியை தொடங்குவது எளிதல்ல என்று தெரிவித்தார்.
செலவுகள்
ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கோ அல்லது வேறு மேற்கத்திய நாட்டிற்கோ மாற்றினால், அது அதிக தொழிலாளர் செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உற்பத்தி செலவினம் அதிகரிக்கும், போட்டித்தன்மையுடன் இருக்க, ஆப்பிள் தனது லாப வரம்புகளை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். மேற்கத்திய சந்தைகளுக்கு அருகில் இடம்பெயரும் மூலோபாய முறையீடு இருந்தபோதிலும், இந்த மாற்றம் நிதி ரீதியாக ஆப்பிள் நிறுவனத்துக்கு சவாலானதாக இருக்கும் என்று வர்ததக துறையினர் தெரிவித்தனர்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications