வாழ்க்கையில ஒரு முறையாவது ஐபோன் பயன்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. ஆனால் அதன் விலை அதிகமாக இருப்பதால் பலர் இந்த ஆசையை மறந்து விடுகின்றனர். இந்நிலையில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது ஐபோன் 16 மாடலுக்கு ப்ளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ-க்கு தற்போது ரூ.12000 வரை தள்ளுபடி விலையில் Flipkart-ல் வாங்கலாம். அதன்படி, இந்த போன் ரூ.1,12,900க்கு கிடைக்கும்.

டெக் உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் நிறுவனம் ஆப்பிள். செல்போன்கள், வாட்ச்கள், ஏர்பாட்ஸ் என கேட்ஜட் சந்தைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கிவருகிறது. அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா சந்தையில் ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் புதிய மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஐபோன் 16 மாடலுக்கு போட்டி போட்டு தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. அதாவது ப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் ஐபோன் 16 ப்ரோ மாடலை ரூ.1,12,000க்கு வாங்க முடியும். அது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தற்போது, பிளிப்கார்ட் இந்த போனில் ரூ.7,000 தள்ளுபடியை வழங்குகிறது, அதன்படி, இதன் விலை ரூ.1,12,900 ஆகக் குறைகிறது. கூடுதலாக, HSBC வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.5,000 தள்ளுபடியும், HSBC வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ரூ.5,500 தள்ளுபடியும் பெறலாம்.
சிறப்பம்சங்கள்: ஐபோன் 16- மாடல் 6.3 இன்ச் திரை கொண்டதாக உள்ளது. LTPO OLED டிஸ்ப்ளே 120Hz வரை உள்ளது, இந்த டிஸ்ப்ளே HDR10 மற்றும் Dolby Vision சப்போர்ட்டுடன் உள்ளது, மேலும் இது 2000 ஒளி அளவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் 16 ப்ரோ A18 சிப்செட்டால்(chipset ) இயக்கப்படுகிறது. இது 8GB RAM மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று-பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48MP பிரதான கேமரா, 12MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 12-MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இறுதியாக, ஐபோன் 16 ப்ரோ 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்டு சப்போர்ட்டுடன் 3582mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications