உலகின் முன்னணி டெக் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றில் அதிகப்படியான ஒரே நாள் வளர்ச்சி நாட்களில், முக்கியமான நாளாக நவம்பர் 10ஆம் தேதி அமைந்துள்ளது.
அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் வருடாந்திர அளவில் 7.7 சதவீத அளவில் உள்ளது, 2022 ஆம் ஆண்டில் இது தான் குறைவான பணவீக்க நிலையாக உள்ளது. ஜூன் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருட உச்ச அளவான 9.1 சதவீத உயர்வைத் தொட்டது யாராலும் மறக்க முடியாது.
இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் டாவ் ஜோன்ஸ் குறியீடு 3 சதவீதமும், நாஸ்டாக் 6 சதவீதமும், எஸ் அண்ட் பி குறியீடு 4 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தத் தடாலடி வளர்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பான வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 உற்பத்தி செய்வது பெரும் பிரச்சனைகளும், மாற்றங்களும் உருவாகியுள்ள வேளையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தி ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது.
ஆப்பிள் ஐபோன் 14
ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம் செய்யும் போது அதன் உற்பத்தியைச் சீனாவில் செய்ய முடிவு செய்தது, அதன் பின்பு குறிப்பிட்ட அளவிலான உற்பத்தியை இந்தியாவில் செய்ய முடிவு செய்தது. இதற்கிடையில் சீனாவில் கொரோனா தொற்றுக் காரணமாக முக்கியமான ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை இருக்கும் பகுதியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பெரும் பகுதி உற்பத்தியை இந்தியாவுக்குத் திரும்பியது.
ஐபோன் டிமாண்ட்
இதேவேளையில் ஐபோன்-க்கான டிமாண்ட் குறைந்துள்ளதால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்தது, இந்த இடைப்பட்ட காலத்தில் ரெசிஷன் அச்சம் காரணமாக ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சில குறிப்பிட்ட ஊழியர்களை ஆப்பிள் பணிநீக்கம் செய்யும் மோசமான நடவடிக்கையும் நிகழ்ந்தது.
பணவீக்கம்
இந்த நிலையில் அமெரிக்காவின் அக்டோபர் மாத பணவீக்கம் 4 மாதம் தொடர்ந்து சரிந்து 7.7 சதவீதமாகக் குறைந்த நிலையில், அமெரிக்கப் பத்திர சந்தையில் இருந்த முதலீடுகள் அதிகளவில் பங்குச்சந்தைக்கு மாறியது ஆப்பிள் நிறுவனத்திற்கும் அதன் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
ஆப்பிள் சந்தை மதிப்பு
உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வியாழக்கிழமை அதாவது பணவீக்கம் தரவுகள் வெளியான நாளில் ஏற்பட்ட வர்த்தக மாற்றம் மட்டும் 190.9 பில்லியன் டாலர் அளவில் அதிகரித்துள்ளது.
அமேசான்
2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 190.8 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்தது, இந்தச் சாதனையை முறியடித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.வியாழக்கிழமை ஆப்பிள் நிறுவன பங்குகள் 8.8 சதவீதம் வரையில் உயர்ந்தது, இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பீடு சுமார் 2.34 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
190.9 பில்லியன் டாலர்
இதன் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஓரு நாளில் அதிகம் உயர்ந்த 5 சாதனைகளில் ஆப்பிள் 4 இடத்தைப் பெற்றுள்ளது அமேசான் ஒரேயொரு இடத்தைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 17 சதவீதம் சரிந்துள்ளது.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications