ஸ்மார்ட்போன் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் இந்தியாவை ஒரு தலைமை இடமாக மாற்ற வேண்டும் எனத் திட்டத்தில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு களத்தில் இறங்கியது. குறிப்பாக அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் ஏற்பட்ட காலத்தில் சீனாவில் இருந்து ஆப்பிள் மற்றும் சாம்சங் தனது தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றிய போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மீது பெரிய நம்பிக்கை உருவானது.
இதன் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்-கென பிரத்தியேகமாக உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் ஏற்கனவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தனது உற்பத்தி அளவை அதிகரிக்க முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் படி இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் உற்பத்தி பணிகளைச் செய்து வரும் விஸ்திரான் உற்பத்தியை அதிகரிக்க விரிவாக்க பணிகளுக்காகக் கூடுதல் முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
பெங்களூரு
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூருக்கு சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாரசபுரா பகுதியில் அமைந்திருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன் சுமார் 900 கோடி ரூபாய் தொகையைக் கூடுதலாக முதலீடு செய்ய முடிவு செய்து அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
கூடுதல் முதலீடு
இந்நிலையில் விஸ்திரான் தற்போது கூடுதலாக 900 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 8000 பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்க முடியும் என விஸ்திரான் நம்புகிறது.
இதனால் தென் மாநிலங்களில் இருந்து அதிகளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கூடுதல் முதலீடு
இந்நிலையில் விஸ்திரான் தற்போது கூடுதலாக 900 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 8000 பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்க முடியும் என விஸ்திரான் நம்புகிறது.
இதனால் தென் மாநிலங்களில் இருந்து அதிகளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதிய திட்டம்
விஸ்திரான் தற்போது ஸ்மார்ட்போன்கள் உடன் Internet of Things கருவிகள், பியோடெக் கருவிகள் என இதர டெக் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன் படி இப்புதிய முதலீடுகள் இப்புதிய திட்டத்திற்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் எனக் கருதப்படுகிறது.
பெகாட்ரன்
சில நாட்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு உற்பத்தி கூட்டணி நிறுவனமான பெகாட்ரன், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க 150 மில்லியன் டாலர் அதாவது 1,100 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்த நிலையில், தற்போது ஒப்புதல் கிடைக்குள்ளது.
சென்னை
இந்த ஒப்புதல் மூலம் தொழிற்சாலையை அமைக்கும் பணியை வேகமாகத் துவங்க உள்ள பெகாட்ரன் 2021 பிற்பகுதி அல்லது 2021 முற்பகுதியில் உற்பத்தியைத் துவங்க உள்ளது நிலையில் இந்தத் தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் பெகாட்ரன் சென்னையில் தனது தலைமை அலுவலகத்தை இந்தியாவில் அமைத்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications