ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் போன்ற உயர் ரக ஸ்மார்ட்போன்களை வாங்குவது இனி எளிதாகும். ஏனெனில் மத்திய அரசு மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய பாகங்களின் அடிப்படை சுங்க வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு பயன் அளிப்பதுடன், இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மொபைல் போன்கள், பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பது நுகர்வோருக்கு நன்மை பயக்கும் எனக் கூறினார்.

இந்த மாற்றம் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஆப்பிள் நிறுவனம், உள்ளூர் உற்பத்தியை அதிகரித்திருந்தாலும், இன்னும் ஒரு பகுதியளவு ஸ்மார்ட்போன்களை இந்தியாவுக்கு இன்னமும் இறக்குமதி செய்து தான் வருகிறது.
கிட்டத்தட்ட 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த சாதனங்களின் மீதான வரியில் 5 சதவிகிதம் குறைப்பு ஆண்டுக்கு சுமார் 35 முதல் 50 மில்லியன் டாலர் பயனளிக்கும் என ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் இணை நிறுவனர் நீல் ஷா தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ்கான் மற்றும் இந்தியாவின் டாடா குழுமம் போன்ற உற்பத்தியாளர்கள் மூலம் ஆப்பிள் இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தாலும், இன்னும் சில ஆப்பிள் பிராண்டுகளின் உயர் ரக ஸ்மார்ட் போன்களான புரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை இறக்குமதி செய்கிறது.
சாம்சங் போன்ற பிற உற்பத்தியாளர்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கின்றன. தற்போது, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 6% பங்குகளை கொண்டுள்ளது.
ஜனவரியில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மொபைல் போன்களின் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை விட இந்தியா முக்கிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மையமாக மாறுவதில் பின்தங்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தது. குறைந்த வரிகள் உலகளாவிய நிறுவனங்களை விரைவாக ஈர்ப்பதற்கு அவசியம் என அவர்கள் வாதிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். 24 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்ளூர் உற்பத்தி திட்டத்தில் மொபைல் போன்கள் சார்ந்த திட்டங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications