மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான வரியைக் குறைத்த சில நாட்களில், உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்-களின் விலையை 3-4% விலை குறைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்று முதலே ரீடைல் சந்தையில் ஐபோன்களின் விலை குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புரோ அல்லது புரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.5100 முதல் ரூ.6000 வரை குறைக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஐபோன் 13, 14 மற்றும் 15 ஆகிய மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலையும் ரூ.300 குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் SE-யின் விலை ரூ.2300 குறைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் முதல் முறையாக தனது புரோ மாடல்களின் விலையைக் குறைத்துள்ளது என்பதை டெக் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய பட்ஜெட்டில் மொபைல் போன்களுக்கான அடிப்படை சுங்க வரி 20% -லிருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, புதிய மாடல்கள் அறிமுகமான பிறகு ஆப்பிள் பழைய புரோ மாடல்களை நிறுத்திவிடும். விற்பனையை அதிகரிக்க டீலர்கள் மற்றும் ரீசெல்லர்களுக்கு மட்டுமே சில சிறப்பு தள்ளுபடிகளை வழங்குவார்கள். புரோ மாடல்களின் MRP விலை இதற்கு முன்பு குறைக்கப்பட்டத்தில்லை, முதல் முறையாக மத்திய அரசு இறக்குமதி வரியை குறைந்தது மூலம் ரீடைல் சந்தையில் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
ஐபோன்களின் முழு விலை பட்டியல்:
| மாடல் | பழைய விலை | புதிய விலை |
| ஐபோன் SE | ரூ.49,900 | ரூ.47,600 |
| ஐபோன் 13 | ரூ.59,900 | ரூ.59,600 |
| ஐபோன் 14 | ரூ.69,900 | ரூ.69,600 |
| ஐபோன் 14 Plus | ரூ.79,900 | ரூ.79,600 |
| ஐபோன் 15 | ரூ.79,900 | ரூ.79,600 |
| ஐபோன் 15 Plus | ரூ.89,900 | ரூ.89,600 |
| ஐபோன் 15 Pro | ரூ.1,34,900 | ரூ.1,29,800 |
| ஐபோன் 15 Pro Max | ரூ.1,59,900 | ரூ.1,54,000 |
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை-க்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இதுநாள் வரையில் ஐபோன் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதே தொழிற்சாலையில் ஐபேட்களைத் தயாரிக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தொழிற்சாலையில் ஆப்பிளின் ஸ்மார்ட்போன்களை மட்டுமே தயாரித்தது வருகிறது. முதல் முறையாக பலகட்ட ஆய்வுகள், சோதனைகளுக்குப் பிறகு ஐபேட் தயாரிக்கும் முயற்சியில் ஆப்பிள் இறங்கியுள்ளது. இதில் முக்கியமாக ஆப்பிள் ஸ்ட்ரிக்ட் ஆர்டரை தொடர்ந்து முதல் நிறுவனமாக ஃபாக்ஸ்கான் தனது சென்னை தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபேட்களைத் தயாரிக்கத் தொடங்குவதில் தீவிரமாக பணியாற்றத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் விரைவில் மேடு இன் இந்தியா என்ற சொற்கள் உடன் ஐபேட் வெளியாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications