இந்தியாவில் தயாரிக்கப்படும், விற்கப்படும் ஸ்மார்ட்போன் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சமீபத்தில் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்தது. ஆனால் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரச விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி மூலம் ஐபோன் விலை 2 லட்சம் வரையில் உயரும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் குறைந்து பங்குச்சந்தையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் நிலையும் உருவாக்கியுள்ளது. டிரம்ப் விதித்துள்ள இந்த வரி மூலம் ஐபோன்களின் தற்போதைய விலையில் இருந்து 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவுக்கும், பிற உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது டிரம்ப் விதித்துள்ள வரி மூலம் சீனாவில் இருந்து அமெரிக்க வரும் அனைத்து பொருட்களுக்கும் 54 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.
உதாரணமாக, ஐபோன் 16 இன் அடிப்படை மாடல் தற்போது சுமார் 799 டாலர்களுக்கு (சுமார் 68,000 இந்திய ரூபாய்) விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் வரி விதிப்பு சுமையை ஐபோன் விலையுடன் சேர்த்தால், அதன் விலை சுமார் 1,142 அமெரிக்க டாலர்களாக (97,000 இந்திய ரூபாய்க்கு மேல்) உயரக்கூடும். இது 43 சதவீதம் விலை உயர்வாகும்.
அதேபோல், 6.9 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 1 டெராபைட் ஸ்டோரேஜ் கொண்ட பிரீமியம் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் விலை சுமார் 2,300 அமெரிக்க டாலர்களாக அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து தனது உற்பத்தி தளத்தைப் பிற நாடுகளுக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தாலும், மற்ற நாடுகள் மீதும் டிரம்ப் அரசு வரி விதித்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்தால் 26 சதவீதம், இதுவே வியட்நாம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்தால் 46 சதவீதம் வரி. எப்படிப் பார்த்தாலும் ஐபோன் விலை 20 முதல் 45 சதவீதம் வரையில் உயர்வதற்கான சகல வாய்ப்புகளும் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க அரசிடம் இருந்து சில சிறப்பு வரி விலக்குகளைப் பெற்று இதற்கு முன்பு விலை உயர்வுகளைத் தவிர்த்தாலும், தற்போதைய வரி விதிப்பில் அத்தகைய விதிவிலக்குகள் வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஆப்பிள் நிறுவனம் இந்த வரி சுமையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்காமல் தனது லாபத்தில் இருந்து குறைக்கும் பட்சத்தில் ஐபோண் விலை உயராது.


Click it and Unblock the Notifications