மாஸ் காட்டும் அமேசான்! அதிரடி விலை குறைப்பில் ஐபோன் & ஸ்மார்ட்ஃபோன்கள்!

கடந்த 2019-ம் ஆண்டு பண்டிகை காலங்கள் மட்டும் இன்றி சாதாரண காலங்களிலும் தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் உத்தியைப் பயன்படுத்தி வியாபாரம் பார்த்தது அமேசான்.

இந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகளை டார்க்கெட் வைத்து, தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020-ஐத் தொடங்கி இருக்கிறது.

அமேசான் என்றால், அவர்கள் தள்ளுபடி தானே நினைவுக்கு வரும். வழக்கம் போல ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஆப்பிள் ஐபோன்களை சரமாரி தள்ளுபடிக்கு களம் இறக்க இருக்கிறார்களாம்.

40 % தள்ளுபடி

40 % தள்ளுபடி

இந்த அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020-ல், இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகிக் கொண்டு இருக்கும் விவோ, ஒப்போ, சியாமி, ரியல் மீ, எல் ஜி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சுமார் 40 சதவிகிதம் வரை விலை குறைத்து கொடுக்க இருகிறார்களாம்.

சாம்சங்

சாம்சங்

அதே போல இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் பழம் தின்று கொட்டை போட்ட சாம்சங் நிறுவன ஸ்மார்ட் போன்களுக்கும் இந்த 40 சதவிகித விலையை குறைப்பு இருக்கும் என அமேசான் தரப்பு சொல்லி இருக்கிறார்களாம். எனவே எந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்க இருக்கிறோம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் மக்களே.

எஸ்பிஐ தள்ளுபடி

எஸ்பிஐ தள்ளுபடி

இந்த 40% விலை குறைப்பு போக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உடனும் சில ஒப்பந்தங்களைச் செய்து இருக்கிறார்களாம். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம். அதோடு மாதம் 833 ரூபாயில் இருந்து இ எம் ஐ செலுத்தும் வகையில் கடன் வசதிகளும் கொடுக்க இருக்கிறார்களாம்.

தொடக்கம்

தொடக்கம்

வரும் ஜனவரி 19, 2020, ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணியில் இருந்து இந்த அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020 சலுகைகள் தொடங்க இருக்கிறதாம். அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, ஜனவரி 18, 2020 மதியம் 12 மணி முதல் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020 தொடங்கிவிடுகிறதாம்.

எந்த எந்த போன்கள்

எந்த எந்த போன்கள்

Redmi Note 8 Pro,
OnePlus 7T,
The Samsung Galaxy M30,
Vivo U20,
Apple iPhone XR போன்ற ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஆப்பிளின் ஐஃபோன்களுக்கு பெரிய அளவில் விலை குறைப்பு மற்றும் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நோ காஸ்ட் இ எம் ஐ

நோ காஸ்ட் இ எம் ஐ

மேலே சொன்ன அதிரடி விலை குறைப்புகள் + ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கான 10 சதவிகித கூடுதல் தள்ளுபடி எல்லாம் போக, வட்டி இல்லாத இ எம் ஐ ஆப்ஷன்களையும் அறிவிக்க இருக்கிறார்களாம். இது போக எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்பவர்களுக்கும் தனி சலுகைகள் இருக்கிறதாம்.

45 % தள்ளுபடி

45 % தள்ளுபடி


அமேசான் நிறுவனத்தின் எலெக்ட்ரானிக் சாதனங்களாக
அமேசான் எக்கோ,
அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்,
அமேசான் கிண்டல் இ ரீடர்... போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் சுமாராக 45 சதவிகிதம் வரை தள்ளுபடியில் விற்க இருக்கிறார்களாம். எனவே மக்களே உண்மையாகவே பொருட்களை வாங்க வேண்டிய தேவை இருந்தால் மட்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் பொருளை வாங்குங்கள்.

நோ காஸ்டில் சிக்க வேண்டாம்

நோ காஸ்டில் சிக்க வேண்டாம்

பொதுவாக நோ காஸ்ட் இ எம் ஐ என்பது பெயர் அளவில் மட்டுமே இருக்கும் விஷயம். 50,000 ரூபாய்க்கு வாங்க இருக்கும் பொருளை நோ காஸ் இ எம் ஐ வசதியில் வாங்கினால், அதற்கு 3 மாதம் அல்லது 6 மாதத்துக்குள் இ எம் ஐ செலுத்தச் சொல்வார்கள்.

மாய வலை

மாய வலை

அப்போது தான் நோ காஸ்ட் இ எம் ஐ சலுகையைப் பெற முடியும் என்பார்கள். அப்படி 3 அல்லது 6 மாதத்துக்குள் செலுத்த முடியவில்லை என்றால், அடுத்தடுத்த 9 மாதம், 12 மாதம்... போன்ற இ எம் ஐ காலங்களுக்கு, தானாகவே வட்டி கணக்காகத் தொடங்கிவிடும். எனவே நோ காஸ்ட் இ எம் ஐ என்கிற மாய வலையில் சிக்க வேண்டாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+