பூமியின் துணை கோளான நிலாவில் 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்டிராங் கால் பதித்தது தான் மனித குலத்தின் விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பாமலேயே இருந்தது. ஆனால் இன்று அது நிறைவேறி இருக்கிறது.
ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறது நாசா. ஓரியன் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நான்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க வீரர்களும் ஒரு கனடா நாட்டு வீரரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் கிறிஸ்டினா கோச் என்ற ஒரு விண்வெளி வீராங்கனையும் இடம்பெற்றுள்ளார்.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது சில நிமிடங்களிலேயே விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. ஒரு மாருதி வேன் அளவு மட்டுமே கொண்டதாக இருக்கிறது இந்த விண்கலம். இந்த குறுகிய இடத்தில் இந்த நான்கு வீரர்களும் 10 நாட்களுக்கு உறங்கவும் உண்ணவும் வேலை செய்யவும் வேண்டும். இந்த பயணத்தில் வீரர்கள் நிலவில் கால் பதிக்கமாட்டார்கள்.
அதாவது இந்த விண்கலம் நிலவில் தரையிறங்காது, மாறாக நிலவை அதன் பாதையில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். வழக்கமாக விண்வெளி பயணம் செல்லும் போது வீரர்கள் கையில் போன் போன்ற கருவிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இந்த முறை முதன்முறையாக நாசா விண்வெளி வீரர்கள் தங்களின் ஐபோன்களை உடன் கொண்டு செல்ல அனுமதி தந்திருக்கிறது. எனவே முதன்முறையாக ஐபோன்கள் பூமியை விட்டு விண்வெளிக்கும் நிலவின் பாதைக்கும் சென்றுள்ளன.
இந்த போன்களை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ள முடியாது ஆனால் புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் பெறலாம், ஐபோன்கள் ஏரோபிளேன் மோடிலேயே வைக்கப்பட்டிருக்கும் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் வீரர்கள் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க ஐபோன்களை பயன்படுத்துவார்களாம். இதற்கு முன்பு அதிக எடை கேமராக்களை சுமந்து சென்ற நிலையில் அதற்கு மாற்றாக ஐபோன்களை கொண்டு சென்றுள்ளனர்.
ஐபோன்கள் மூலம் அவர்கள் எளிமையாக தாங்கள் செல்லும் இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய ஒரு கேம் சேன்ஜராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஸ்மார்ட் போன்களின் கேமராக்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் படங்கள், வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டதாக இருப்பதையே இது காட்டுகிறது. விண்வெளி வீரர்கள் வைஃபையில் கனெக்ட் செய்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அங்கிருந்து பூமிக்கு அனுப்பலாம் என்கிறது நாசா.


Click it and Unblock the Notifications