IPL 2021.. ஜியோவின் சரவெடி சலுகை.. ஐபிஎல்லுக்கு ஏற்ற டேட்டா திட்டங்கள்.. இது வேற லெவல்..!

ஐபிஎல் 2021 கிரிகெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கவுள்ளது. இந்த முறையும் இந்த போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் தொடங்குகிறது. எப்படியிருப்பினும் ஐபிஎல் உற்சாகம் குறைந்தபாடாக இல்லை.

இப்படியிருக்கும் நிலையில் ரசிகர்கள் எந்தவொரு தொடரையும் மிஸ் பண்ணாமல் லைவில் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, பல ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஆக இதன் மூலம் முழு போட்டியையும் எந்த தடையும் இல்லாமல் நீங்கள் பார்த்து ரசிக்க முடியும். இதற்காக ஜியோ எந்த மாதிரியான சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்

4 ப்ரீபெய்டு திட்டங்கள்

4 ப்ரீபெய்டு திட்டங்கள்


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் சேர்ந்து, நான்கு ப்ரீபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இது 401 ரூபாய், 598 ரூபாய், 777 ரூபாய் மற்றும் 2,599 ரூபாய் திட்டங்களை அறவித்துள்ளது. இந்த திட்டங்களில் என்னென்ன சலுகைகள்? எவ்வளவு டேட்டா? வெளிடிட்டி என்ன வாருங்கள் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.401 திட்டம்

ஜியோவின் ரூ.401 திட்டம்

ஜியோவின் ரூ.401 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக 6ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இதோடு இலவ்ச வாய்ஸ் கால் சேவையும் பெற முடியும். ஆக ஜியோவின் இந்த சலுகை மூலம் ஐபிஎல் மேட்ச்களை நீங்கள் தடையில்லாமல் பெற முடியும்.

ஜியோவின் ரூ,598 திட்டம்

ஜியோவின் ரூ,598 திட்டம்

ஜியோவின் ரூ,598 திட்டத்திலும் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது. ஆக இதன் மூலம் இலவசமாக லைவ் மேட்ச் களை பார்க்க முடியும். இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாக்களை 56 நாட்களுக்கு வழங்குகிறது. இதன் வேலிடிட்டியும் 56 நாட்களாகும். இதிலும் வரம்பற்ற கால் சேவை உண்டு.

ஜியோவின் ரூ,777 திட்டம்

ஜியோவின் ரூ,777 திட்டம்

ஜியோவின் ரூ,777 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் கூடுதலாம 5ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களாகும். இந்த திட்டத்திலும் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது. இது தவிர வரம்பற்ற கால் சேவையும் உண்டு.

ஜியோவின் ரூ.2,599 திட்டம்

ஜியோவின் ரூ.2,599 திட்டம்

ஜியோவின் ப்ரீபெய்டு திட்டங்களில் மிகப்பெரியது இதுவாகும். இது 365 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற கால் சேவையும் கிடைக்கும். இந்த திட்டத்திலும் கூடுதலாக 10ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்திலும் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+