இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் ஒரு முயற்சி என்றாலும், ஐபிஎல் கிரிக்கெட்-ஐ தாண்டி மிகப்பெரிய வர்த்தக தளமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. அணிகளின் முதலீடு, ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வது முதல், ஒளிபரப்பு, விளம்பரம் வரையில் பணம் புழக்கம் அதிகம் கொண்ட இடமாக மாறியுள்ளது
ஐபிஎல் போட்டிகளின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி அதாவது இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி உடன் நம்ம சென்னை அணி களமிறங்க உள்ளது.
இந்த 16வது சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடக்க உள்ளதால் மார்ச் 31 முதல் மே 28ஆம் தேதி போட்டிகள் நடக்க உள்ளது. 10 அணிகள் கப் முக்கியம் பிகிலு என மோதுகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் 16வது சீசனில் எவ்வளவு விளம்பர வருவாய் கிடைக்கும் என கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் போட்டிகளுக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு ஒப்பந்ததை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் வயாகாம்18 வாங்கியுள்ள நிலையில், இதுவரையில் வயாகாம்18 செய்த விளம்பர ஒப்பந்தம், டிஸ்னி ஸ்டார் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் 2023 ஆம் ஆண்டில் சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான விளம்பர வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
டிஸ்னி ஸ்டார், வயாகாம்18
டிஸ்னி ஸ்டார் கடந்த ஆண்டு வரையில் மொத்த டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை கொண்டிருந்த வேளையில், 2023 முதல் ஐபிஎல் மீடியா உரிமையில் டிவி உரிமையை டிஸ்னி ஸ்டார்-க்கும், டிஜிட்டல் உரிமைகளை வயாகாம்18 பெற்றுள்ளது.
டிஸ்னி ஸ்டார் விளம்பர ஒப்பந்தம்
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கு டிஸ்னி ஸ்டார் சுமார் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், 600 கோடி ரூபாய்க்கு கூடுதல் ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் 50 சதவீத ஒப்பந்தம் கிடைத்தாலும், இந்த வருடம் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை கைப்பற்றும்.
வயாகாம்18 விளம்பர ஒப்பந்தம்
இதேவேளையில் வயாகாம்18 நிறுவனம் இந்த வருடத்திற்கான விளம்பர டார்கெட் 3700 கோடி ரூபாய், ஆனால் இதுவரையில் 2700 கோடி ரூபாய் அளவிலான விளம்பர ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளது. மேலும் டிஸ்னி ஸ்டார் இதுவரையில் 13 ஸ்பான்சர்களையும், வயாகாம்18 நிறுவனம் 21 ஸ்பான்சர்களை பெற்றுள்ளது.
டிஸ்னி ஸ்டார் ஸ்பான்சர்கள்
டிஸ்னி ஸ்டார் ஸ்பான்சர்கள் பட்டியல் டாடா நியூ, ட்ரீம்11, ஏர்டெல், கோகோ கோலா, பெப்சி, ஏசியன் பெயிண்ட்ஸ், கேட்பரி, ஜிண்டால் பாந்தர், பார்லே பிஸ்கட், பிரிட்டானியா, ரூபே, கம்லா பசந்த் மற்றும் எல்ஐசி. டிஸ்னி ஸ்டார் நிறுவனம் சுமார் 22க்கும் மேற்பட்ட TV சேனல்களில் ஐபிஎல்-லை ஒளிபரப்பவுள்ளது.
வயாகாம்18 ஸ்பான்சர்கள்
வயாகாம்18 முதல் முறையாக ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள வேளையில் டிஜிட்டல் தளத்தில் மட்டும் ஒளிபரப்ப உள்ளது. வயாகாம்18 ஜியோசினிமா ஆப்-ல் பிராட்காஸ்ட் செய்கிறது. வயாகாம்18 AJIO, பார்லே அக்ரோ, ஈடி மணி, Castrol, Haier, TVS, Cadbury, ITC, Coca-Cola, Kamla Pasand, Puma, UltraTech Cement, Kingfisher, Rapido, Amazon மற்றும் Louis Philippe ஆகிய பிராண்டுகளை ஸ்பான்சர் ஆக பெற்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications