2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஆனது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல், ஜியோ சினிமா ஆப்ஸிலும் இந்த நேரலையை காணலாம். இந்த ஏலத்தில் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் 48 பேர், வெளிநாட்டு அணி வீரர்கள் 193 பேர், உறுப்பு நாடுகளை சேர்ந்த 3 பேர் மற்றும் இதில் இந்திய அணியில் அறிமுகம் ஆகாத 318 வீர்ர்கள், வெளிநாட்டு அணிகளில் களமிறங்காத 12 பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஐபிஎல் ஏலப் பட்டியலில், இந்திய நட்சத்திர வீரர்கள் அனைவரது அடிப்படை விலையும் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியில் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதில் 10 அணிகளிலும் உள்ள 46 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டிற்கான அணியை 25 பேர் கொண்ட அணியாக உருவாக்க வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 10x25= 250 பேர் இடம் பெறுவார்கள். ஏற்கனவே 46 பேர் உள்ள நிலையில், மொத்தம் 204 பேர் ஏலம் எடுக்கப்படலாம். ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக ரூ.120 கோடி செலவு செய்யலாம். இதில் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டன.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ள 10 ஐபிஎல் அணிகளின் மீதத் தொகை: சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 69 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - 110.50 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - 41 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications