ஐபிஎல்-ல் 13 வயது இளம் கிரிக்கெட் வீரர்.. சிறிய வயதில் பெரும் சாதனை படைக்கும் சூர்யவான்ஷி..!!

வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 24, 25 இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இந்த ஏலம் ஆனது நடைபெறவுள்ளது. இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 574 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் 13 வயதே ஆன பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். இவர் யார்? இவர் ஏன் இந்த சிறிய வயதில் ஐபிஎல் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் தேர்வு ஆனது இந்திய கிரிக்கெட் அணி வருங்காலத்திற்கு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. அந்த வகையில், தற்போது பீகாரை சேர்ந்த 13வ் வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம் வீரர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், ஏலப் பட்டியலில் ரூ. 30 லட்சம் ஆரம்பத் தொகைக்கு 491-வது வீரராகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார். இவர் முன்னதாக, இளம் கிரிக்கெட் வீரர், வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 2024க்கான இந்திய அணியில் இடம்பிடித்த பிறகு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளார்.

ஐபிஎல்-ல் 13 வயது இளம் கிரிக்கெட் வீரர்.. சிறிய வயதில் பெரும் சாதனை படைக்கும் சூர்யவான்ஷி..!!

BCCI இன்று 366 இந்திய வீரர்கள் மற்றும் 208 சர்வதேச வீரர்களுடன் 1,574 வீரர்களின் ஆரம்ப பட்டியலை 574 ஆக குறைத்துள்ளது. ஐபிஎல் 2025 ஏலப் பட்டியலில் தற்போதைய அனைத்து இந்திய வீரர்களும் முதன்மையான அடிப்படை விலையில் இடம்பிடித்துள்ளனர். பட்டியலில் 491வது இடத்தைப் பிடித்துள்ள சூர்யவன்ஷி, அன்கேப்டு பேட்டர் பிரிவின் (UBA9) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளார். ஏலத்தில் அவர் சேர்க்கப்பட்டிருப்பது இந்திய கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் வீரர்களில் இடம்பிடித்துள்ளார்.

12 வயதில் தனது 12 வயதில் வினு மங்கட் டிராபி தொடரில் பீகாருக்காகக் களமிறங்கிய வைபவ், ஐந்து போட்டிகளில் 400 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து, 2023 நவம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா A, இந்தியா B அணி, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் மோதும் தொடரில், இந்தியா B அணியில் இடம்பெற்றார். 2024 ஐசிசி U19 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யவான்ஷி 41 ரன்கள் அடித்தார். ஆனால், வங்கதேசம் மற்றும் இந்தியா A அணிகளுக்கெதிரான ஆட்டத்தில் 0, 8 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், ஐசிசி U19 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனது.

ரஞ்சியில் மொத்தமாக 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சூர்யவான்ஷி 100 ரன்களை எடுத்திருக்கிறார். இதில், மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 41 அடித்ததே இப்போதைக்கு ரஞ்சியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், பந்து வீச்சில் ரஞ்சியில் இரண்டு ஆட்டங்களில் பந்துவீசி ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சூர்யவன்ஷி 12 ஆண்டுகள் மற்றும் 284 நாட்களில் பீகாருக்கான மதிப்புமிக்க ரஞ்சி டிராபியில் அறிமுகமாகி, வரலாற்றில் எட்டாவது-இளைய முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1986-க்குப் பிறகு ரஞ்சி டிராபியில் அறிமுகமான மிக இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். இந்த சாதனை அவரை இந்தியாவின் மிகவும் உற்சாகமான இளம் திறமையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 2024 இல், ஆஸ்திரேலியா U-19க்கு எதிரான இளைஞர் தொடரில் சர்வதேச அரைசதம் அடித்த இளைய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தற்போது பங்களாதேஷ் தேசிய அணியின் கேப்டனாக உள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

அதேபோல், கடந்த செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற இந்தியா U19 vs ஆஸ்திரேலியா U19 இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில், 58 பந்துகளில் சதமடித்துள்ளார். இதன்மூலம், இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிவேக சதம் அடித்து அடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது அவரது இரண்டாவது அதிவேக சதமாகும். இதற்கு முன் 2005-ல் இங்கிலாந்தின் மொயின் அலி இலங்கைக்கு எதிராக டெஸ்டில் 56 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

சூர்யவன்ஷி இந்த இளம் வயதில் வளர்ச்சியடைந்தாலும், இவரில் இந்த கிரிக்கெட் பயணத்தில் சர்ச்சைகள் தொடர்கின்றன. செப்டம்பர் 2023 இல் அவர் 14 வயதை அடைவதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. சூர்யவன்ஷி பிறந்த ஆண்டு 2011 என்ற அதிகாரப்பூர்வ பதிவுக்கு எதிராக இருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிசிசிஐ மற்றும் பீகார் கிரிக்கெட் சங்கம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நவம்பர் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் U19 ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் சூர்யவான்ஷி இடம்பெற்றிருக்கிறார். நவம்பர் 30-ம் தேதி இதில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய இளைஞர் கிரிக்கெட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட இளம் இந்திய அணிக்கு இந்த போட்டி ஒரு முக்கியமான களமாக இருக்கும்.

ஆசிய கோப்பை சூர்யவன்ஷிக்கு ஒரு பெரிய மேடையில் தனது திறமைகளை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மறுக்க முடியாத திறமை, நெகிழ்ச்சி மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றால், சூர்யவன்ஷி கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவராக மாறுவதற்கான சாத்தியம் உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை நோக்கி அவர் மற்றொரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்துள்ளதால், அனைத்துக் கண்களும் பீகாரைச் சேர்ந்த இந்த இளம் திறமை மீது இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தனது 13 வயதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யவான்ஷி ஐபிஎல் ஏலத்தில் அணிகளிடையே கடுமையான போட்டியில் இருப்பார். ஏதேனும் ஒரு அணி இவரை எடுக்கும் பட்சத்தில் இளம் வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெறுவார். அதேபோல், அணியில் பிளேயின் 11-ல் இடம்பிடித்தால் ஐபிஎல்-ல் மிக குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சிறந்த சாதனையை நிகழ்த்துவார். எனவே, ஐபிஎல் போட்டிகளும் அவருக்கும் மேலும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+