ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பத்து அணிகள் தங்கள் அணிகளை உருவாக்கும். 1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். அணிகள் தங்களிடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் மீதமுள்ள பர்ஸ் மதிப்புகளை அறிவித்துள்ளன. ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் அதிக ஏலத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெறவுள்ளது. நட்சத்திர பட்டியலில் இங்கிலாந்தில் ஜாஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்களும், 2-வது பட்டியலில் யுவேந்திர சாஹல் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஏலப்பட்டியலில் 12 பேர் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்: இதில் முதல் ஜாஸ் பட்லர், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களது அடிப்படை தொகை ரூ.2 கோடியாக உள்ளது. இதில் ரிஷப் பண்ட்-ஐ ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், ரூ.25 கோடிக்கு மேல் வாங்கப்பட்டலாம் என கூறப்படுகிறது.

அடுத்தப்படியாக, 2-வது பட்டியலில் யுவேந்திர சாஹல், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கே.எல்.ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் டேவிட் மில்லரின் அடிப்படை தொகை ரூ.1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 வீரர்களுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக உள்ளது.
ஏலத்துக்காக பதிவு செய்துள்ள வீரர்களில் 81 பேரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடியில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடியில் 18 பேரும், ரூ.1 கோடியில் 23 பேரும், ரூ.75 லட்சத்தில் 92 பேரும், ரூ.50 லட்சத்தில் 8 பேரும், ரூ.40 லட்சத்தில் 5 பேரும், ரூ.30 லட்சத்தில் 320 பேரும் உள்ளனர்.
ஐபிஎல் ஏலப்பட்டியலில் தமிழக வீரர்கள் விவரம்: அஸ்வின், நடராஜன், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், நாராயன் ஜெகதீசன், பாபா இந்திரஜித்,ஆந்த்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்ஜன் பால், அஜிதேஷ் குருசாமி, ரித்திக் ஈஸ்வரன், ஜாபர் ஜமால், முகமது அலி, லக்சய் ஜெயின், பி.விக்னேஷ், ஷிவம் சிங், குர்ஜப்னீத் சிங், சந்தீப் வாரியர், முருகன் அஸ்வின், மணிமாறன் சித்தார்த், சஞ்சய் யாதவ், சோனு யாதவ், ஜாதவேத் சுப்பிரமணியன், முகமது கான், துஷார் ரஹேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications