இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், 17வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) தொடர் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு, வியாழக்கிழமை தரம்ஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேஷ் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி) அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த அறிவிப்பு, பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட ட்வீட்டில் உறுதிப்படுத்தப்பட்டது: "இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் மத்தியில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுகிறது: பிசிசிஐ". பதற்றம் நிறைந்த சூழலில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, நாட்டிற்கு ஆதரவாக நிற்க விரும்புவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
"நாடு முதலில், கிரிக்கெட் இரண்டாவது" என்ற நிலைப்பாட்டை பிசிசிஐ ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால், ஐபிஎல் போட்டிகளை தொடர்வது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று பிசிசிஐ கருதியது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு பிசிசிஐ அதிகாரி, ஸ்போர்ட்ஸ் நவ் தளத்திற்கு பேசுகையில், "நாங்கள் நாட்டுடன் நிற்க விரும்புகிறோம். எங்களுக்கு நாடே முக்கியம். வீரர்களின் பாதுகாப்பு முதன்மையானது. கிரிக்கெட் ஒருபோதும் நாட்டை விட முக்கியமானதாக இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 10.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 122 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பதற்றம் மற்றும் வட இந்தியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள சூழல் ஆகியவற்றால், மீதமுள்ள போட்டிகளை நடத்துவது சாத்தியமற்றதாக மாறியது. இதன் காரணமாகவும் போட்டிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
தரம்ஷாலாவில் இருந்து வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக பிசிசிஐ நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வட இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், தரம்ஷாலாவில் இருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் உள்ள பதான்கோட் ரயில் நிலையத்திற்கு வீரர்களை சாலை மார்க்கமாக அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அங்கிருந்து ஒரு சிறப்பு ரயில் மூலம் வீரர்கள் மற்றும் ஐபிஎல் பணியாளர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்படுவார்கள்.
தரம்ஷாலாவில் உள்ள ஒரே விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள காங்ரா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள், பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு உட்படலாம் என்பதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (மே 9) லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆட்டமும் மற்ற போட்டிகளைப் போலவே இதுவும் நிறுத்தப்படும்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்திய ராணுவம் திறம்பட எதிர்தாக்குல் நடத்தி வெற்றிக்கண்டது. பாகிஸ்தான் வியாழக்கிழமை சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா மற்றும் அர்னியா பகுதிகளை குறிவைத்து 8 ஏவுகணைகளை ஏவியது, ஆனால் அவை இந்திய வான் பாதுகாப்பு படைகளால் வெற்றிகரமாக தடுக்கப்பட்டன.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?



Click it and Unblock the Notifications