இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), 2026 சீசனுக்கான ஏலத்தை வெளிநாட்டில் நடத்தும் என பிடிஐ செய்தியின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வருட ஏலம் இந்தியாவில் நடக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் வெளிநாட்டில் அதுவும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டு இருந்த வேளையில், திடீரென அபுதாபிக்கு மாற்ற என்ன காரணம்..? நேற்றை டெல்லி விபத்திற்கும் இந்த முடிவுக்குக் காரணமா..?

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் அபுதாபியில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஏலம், கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த மெகா ஏலத்திற்குப் பிறகு மினி ஏலமாக இருக்கும். இந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகளுக்கு தங்கள் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் சிறிய மாற்றங்களைச் செய்ய உதவும்.
ஐபிஎல் ஏலங்கள் வெளிநாட்டில் நடைபெறுவது இது மூன்றாவது முறை. 2023ல் துபாயில் நடந்த ஏலம் புதிய வெளிநாட்டு போக்கைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து 2024ல் ஜெட்டா-வில் (சவுதி அரேபியா) நடைபெற்றது. அபுதாபி-ஐ தற்போது ஐபிஎல் ஏலத்திற்கான மூன்றாவது வெளிநாட்டு இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் டிசம்பர் 15 அல்லது 16 தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது என அதிகாரி தெரிவித்தார்.
ஐபிஎல் அணிகள் ஏலத்தை டிசம்பர் 14ஆம் தேதி நடத்தக் கோரிக்கை வைத்த நிலையில், டிசம்பர் 15-16 ஆம் தேதிகளில் தான் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கோப்பையை முதல் முறையாக வென்ற நிலையில், இந்த ஆண்டு கேப்பை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மத்தியிலான வதந்திகள் மூலம் இப்போதே சூடுபிடித்துள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்தர ஜடேஜா கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சன்-ஐ சிஎஸ்கே அணிக்கு அழைத்து வருவதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணி சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ கூட பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை மும்பை அல்லது பெங்களூரில் நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள், உறுப்பினர்கள் வருவதற்கு வெளிநாடு தான் சரியாக இருக்கும் என்பதால் அபுதாபி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் Ashes போட்டிக்கான பயிற்சி நடத்து வருவதால் வெளிநாட்டு கோச் மற்றும் உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வருவது மிகவும் கடினம் என்பதால் 3வது முறையாக வெளிநாட்டைத் தேர்வு செய்துள்ளது ஐபிஎல் நிர்வாக குழு. இதனால் டெல்லி விபத்திற்கும் ஐபிஎம் ஏல இடத்தின் தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மேலும் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் தங்கள் அணியில் இருக்கும் விளையாட்டு வீரர்களை தக்க வைக்கும் முடிவை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications