ஐபிஎல் ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமையன்று ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரான்சைஸர்களின் ஆர்வத்துக்கு மத்தியில் பெரும் ஆரவாரத்துடன் நடைபெற்றது. இந்த நிலையில் முதல் நாள் ஏலத்தில் என்ன நடந்தது ஒரு கிவிக் ரவுண்ட்அப் பார்ப்போம் வாங்க.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக ஏலம் எடுக்கப்பட்டார். முன்னதாக ஸ்டார்க்கின் சக அணி வீரர் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்திய அணியின் பேட்ஸ்மென் சமீர் ரிஸ்வியின் ஏலம் ரூ.20 லட்சத்தில் தொடங்கி எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவருக்கு இது சரியான ஜாக்பாட். சிஎஸ்கே அணிக்கு கிடைத்த அடுத்த ஹாட் பிக் நியூசிலாந்தின் டேரில் மிச்செல். ரூ.14 கோடிக்கு ஏலத்தில் தேர்வானார்.
இவர்களுக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்கவர்கள் ஹர்ஷல் படேல்(ரூ.11.75 கோடி, பஞ்சாப்), அல்ஜாரி ஜோசப் (ரூ.11.5 கோடி ஆர்சிபி)
ஆஸ்திரேலிய ஸ்டார் வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்த ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்.
உலக அளவில் பெரும் பணம் புரளும் ஸ்போர்ட்ஸ் லீக்குகளில் ஒன்றான ஐபிஎல்லில் 2024 சீசனுக்கான மினி ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றனர்.
10 பிரான்சைஸர்கள் இருக்கையில் இன்னும் 77 ஸ்லாட்டுகள் இருக்கின்றன. அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
ஐபிஎல் விதிகளின்படி ஒரு பிரான்சைஸ் அதிகபட்சமாக எட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம். இதில் தலா 4 இந்தியர்கள், வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். அணிகள் அதிகபட்சமாக தங்களது டீமில் 25 பேரையும் குறைந்தபட்சமாக 18 பேரையும் எடுக்கலாம்.
ஐபிஎல் ஏலத்தில் அதிகப்படியான விலை பேண்டு ரூ.2 கோடியாகும். அதையடுத்து ரூ.1.5 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் ஆகும். இந்த ஏலத்தின் ஹைலைட்ஸ்:
ரூ.7.40 கோடிக்கு ரோவ்மன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.1 கோடி. ஹாரி புரூக் ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் எடுக்கப்பட்டார்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது அதிரடியை கிளப்பிய டிராவிஸ் ஹெட், கடுமையான ஏலத்துக்குப் பிறகு ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கைப்பற்றப்பட்டார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் விற்கப்படவில்லை
கருண் நாயர் விற்கப்படவில்லை, ரூ.50 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மணீஷ் பாண்டே இணைகிறார்.
வனிந்து ஹசரங்கா தனது அடிப்படை விலையான 1.50 கோடிக்கு எஸ்ஆர்ஹெச்சுக்கு தேர்வு செய்யப்பட்டார். உலகக் கோப்பையின் நட்சத்திர வீரரான நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்சாயை ரூ.50 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது. ஷர்துல் தாக்கூர் தனது அடிப்படை விலையான ரூ.2 கோடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தேர்வானார்.
பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செல்கிறார். கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். ஜெரால்டு கோட்ஸி ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஆல்ரவுண்டர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது.
பிற முக்கிய வீரர்கள்:
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டேரில் மிச்செல் ரூ.14 கோடிக்கு விற்கப்பட்டார்.
- கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.
- டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.50 லட்சத்துக்கு டெல்லிக்கு விற்கப்பட்டார்.
- விக்கெட் கீப்பர் கே.எஸ்.பாரத் ரூ.50 லட்சத்துக்கு கேகேஆருக்கு செல்கிறார்.
- அல்சாரி ஜோசப் ரூ.11.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு செல்கிறார்.
- வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ரூ.5.80 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு செல்கிறார்.
- சிவம் மாவி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிறுவனத்துக்கு 6.40 கோடிக்கு விற்கப்பட்டார்.
- 24.75 கோடி ரூபாய்க்கு மிச்செல் ஸ்டார்க் ஐபிஎல் சாதனையை முறியடித்தார். மிகவும் பரபரப்பான ஏலப் போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸால் கைப்பற்றப்பட்டார்.
- ஜெய்தேவ் உனத்கட் ரூ. 1.6 கோடிக்கு எஸ்ஆர்ஹெச்சுக்கு செல்கிறார்
- தில்ஷன் மதுஷங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.4.6 கோடிக்கு வாங்கியது
- முகமது வக்கார் சலாம்கெயில், அடில் ரஷித் விற்கப்படாமல் உள்ளனர்
- அகீல் உசைன் விற்கப்படவில்லை.
- தப்ரைஸ் ஷம்சி, இஷ் சோதி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் விற்கப்படாமல் உள்ளனர்.
- டிசி மற்றும் பிபிகேஎஸ் இடையே கடுமையான ஏலத்துக்குப் பிறகு ரிலீ ரோஸ்ஸோ ரூ. 8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்கிறார்.
- ரூ.50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு செல்கிறார்.
- ரூ.5.8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அன் கேப்டு பட்டியலில் முதல் வீரரான ஷுபம் துபே தேர்வானார்.
- சமீர் ரிஸ்வி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.8.4 கோடிக்கு அடுத்த ஹாட் பிக்காக உள்ளார்.
- ஷாருக் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.4 கோடிக்கு கைப்பற்றியது.
- ரூ.7.20 கோடிக்கு குமார் குஷாக்ராவை டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.
- யாஷ் தயாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.5 கோடிக்கு வாங்கியது.
- சுஷாந்த் மிஸ்ராவை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு வாங்கியுள்ளது
- கார்த்திக் தியாகி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.60 லட்சத்துக்கு செல்கிறார்.
- எம் சித்தார்த் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2.4 கோடிக்கு விற்கப்பட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications