Decacorn-ஆக மாறிய ஐபிஎல்.. 2 வருடத்தில் என்ன நடந்தது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய கிரிக்கெட் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் ஒளிபரப்பை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ள ஐபிஎல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

 

பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் விளையாட்டுப் போட்டிகளில் புதிய மாற்றத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் எனப் பிரான்சைசி முறையிலான ஐபிஎல் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தற்போது DecaCorn என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. சரி DecaCorn என்றால் என்ன..?

நம்ம ரேஞ்சே வேற: ஐபிஎல் போட்டிக்கும் பாகிஸ்தான் பிரிமியர் போட்டிக்கும் உள்ள வித்தியாசம்!நம்ம ரேஞ்சே வேற: ஐபிஎல் போட்டிக்கும் பாகிஸ்தான் பிரிமியர் போட்டிக்கும் உள்ள வித்தியாசம்!

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக்-ன் மொத்த மதிப்பு 2022 ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10.9 பில்லியன் டாலரை தொட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் பணம் மழைப்போலக் கொடுக்கும் ஐபிஎல் டெகாகார்ன் மதிப்பீட்டைப் பெற்றுள்ளதாகக் கன்சல்டிங் நிறுவனமான டி மற்றும் பி அட்வைசரி அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

DecaCorn என்றால் என்ன..?

DecaCorn என்றால் என்ன..?

எப்படி ஒரு நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலர் தொடும் போது யூனிகார்ன் என அழைக்கிறோமோ, இதேபோல் ஒரு வணிகத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலரை தாண்டும் போது டெகாகார்ன் என்று அழைக்கப்படுகிறது.

10.9 பில்லியன் டாலர்
 

10.9 பில்லியன் டாலர்

ஐபிஎல் எகோசிஸ்டம் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் சுமார் 6.2 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது. கடந்த 2 வருடத்தில் சுமார் 75 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது மூலம் தற்போது 10.9 பில்லியன் டாலரை தொட்டுள்ளது என்று டி மற்றும் பி அட்வைசரி அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

70 சதவீதம் வளர்ச்சி

70 சதவீதம் வளர்ச்சி

டாலர் மதிப்பில் இந்த 2 வருடத்தில் 70 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், ரூபாய் அடிப்படையில் ஐபிஎல் எகோசிஸ்டம் மதிப்பு சுமார் 90 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. டி மற்றும் பி அட்வைசரி நிறுவனம் மதிப்பீட்டிற்காகத் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்புழக்க (DCF) முறையைப் பயன்படுத்தியுள்ளது.

2 முக்கியக் காரணம்

2 முக்கியக் காரணம்

ஐபிஎல் மதிப்பில் ஏற்பட்ட தடாலடி வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜூன் மாதம் கையெழுத்திட்ட 6.2 பில்லியன் டாலர் மீடியா ரைட்ஸ் ஒப்பந்தம் மற்றும் இரண்டு புதிய அணிகளின் ஏலம் தான் முக்கியக் காரணம்.

குஜராத், லக்னோ அணிகள்

குஜராத், லக்னோ அணிகள்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் ஆகிய இரு புதிய அணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 1.6 பில்லியன் டாலருக்கு மதிப்பிற்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் போட்டி எண்ணிக்கை விளம்பர அளவுகள், டிக்கெட் விற்பனை ஆகிய அனைத்தும் அதிகரித்தது.

ஐபிஎல் மீடியா ரைட்ஸ்

ஐபிஎல் மீடியா ரைட்ஸ்

இதற்கு ஏற்றார் போல் ஜூன் மூலம் ஐபிஎல் மீடியா ரைட்ஸ் ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளின் டிவி உரிமையை 23,575 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமையை 23,758 கோடி ரூபாய்க்கும் வயாகாம்18 வாங்கியது.

முதல் முறையாக

முதல் முறையாக

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிடப்பட்ட நிலையில் முதல் முறையாக டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை எனத் தனித்தனியாக விற்பனை செய்துள்ளது. வர்த்தகத்திற்கும் இது ஏற்றதாக உள்ளது. சரி ஐபிஎல் எப்படி உருவானது தெரியுமா..?

இந்தியன் கிரிக்கெட் லீக்

இந்தியன் கிரிக்கெட் லீக்

Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் மூலம் நிதி வழங்கப்பட்டு இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) 2007 இல் நிறுவப்பட்டது.ICL ஐ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அங்கீகரிக்கவில்லை.

இந்தியன் கிரிக்கெட் லீக் தோல்வி

இந்தியன் கிரிக்கெட் லீக் தோல்வி

மேலும் BCCI அதன் கமிட்டி உறுப்பினர்கள் ICL நிர்வாகக் குழுவில் இணைவதில் விருப்பம் இல்லாத காரணத்தால் கிரிக்கெட் வீரர்கள் ICL இல் சேர்வதைத் தடுக்க ICL இல் சேருவதற்கு வாழ்நாள் தடை விதித்தது.

 இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக்

2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து BCCI இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் பிரான்சைஸ் அடிப்படையாகக் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியை BCCI அறிவித்தது. முதல் சீசன் ஏப்ரல் 2008 இல் தொடங்க திட்டமிடப்பட்டது, இன்று பிராம்மாண்ட பிராண்டாக உருவெடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ipl ஐபிஎல்
English summary

IPL became decacorn; just in 2 years clocked 70 percent growth crosses $10 billion valuation

IPL became decacorn; just in 2 years clocked 70 percent growth and crosses $10 billion valuation
Story first published: Thursday, December 22, 2022, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X