ஐபிஎல் ஏலம் விரைவில் நடக்க இருக்கும் வேளையில், ஐபிஎல் தொடரின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. எத்தனை பேருக்கு தெரியும். 2025ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்-ன் மொத்த மதிப்பு 20 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் எகோசிஸ்டத்தின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2025ஆம் ஆண்டு 9.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதன் மூலம் 21,600 கோடி ரூபாய் மதிப்பு குறைந்து தற்போது வெறும் தற்போது ரூ.85,000 கோடி அளவில் உள்ளது.

பிராண்ட் ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புவிசார் அரசியல் பதற்றங்கள், இந்திய-பாகிஸ்தான் மோதலால் போட்டிகள் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டது, மெகா ஆக்ஷன் சூழல் மாற்றங்கள் ஆகியவை ஐபிஎல் மதிப்பு சரிய காரணமாக இருப்பதாக அறிவித்துள்ளது. 2020 கொரோனா தொற்றுக்கு பிறகு IPL மதிப்பு இரண்டாவது முறையாக சரிந்துள்ளது. இதோடு முக்கியமாக ரியல் மணி கேம் தடை செய்யப்பட்டதும் ஐபிஎல் மதிப்பு குறைய முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
இதேபோல் அக்டோபர் மாதத்தில் வெளியான D&P ஆலோசனை அறிக்கையில், IPL மதிப்பு இரண்டு ஆண்டுகளாக சரிந்ததாகக் கூறியது. 2023இல் 11.2 பில்லியன் டாலர், 2024இல் 9.9 பில்லியன் டாலர், 2025இல் 8.8 பில்லியன் டாலராக இருப்பதாக கணித்துள்ளது. ஐபிஎல் எகோசிஸ்டத்தின் மதிப்பு குறைந்தது மட்டும் அல்லாமல் ஐபிஎல் அணிகளின் மதிப்பிலும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
2025ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் (MI) 108 மில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடம் பெற்றாலும் கடந்த ஆண்டை விட 9% சரிவு. கடந்த முறை சாம்பியன் பட்டம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 105 மில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 10% குறைவு.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மதிப்பு 2025ஆம் ஆண்டில் 24% சரிந்து 93 மில்லியன் டாலர் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 33% குறைந்து 73 மில்லியன் டாலராக உள்ளகு. குஜராத் டைட்டன்ஸ் (GT) 2% உயர்ந்து 70 மில்லியன் டாலர் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் 3% சரிந்து 66 மில்லியன் டாலராகவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2% குறைந்து 59 மில்லியன் டாலராகவும், டெல்லி கேபிடல்ஸ் 26% சரிந்து 59 மில்லியன் டாலராகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 34% குறைந்து 56 மில்லியன் டாலராகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் 35% சரிந்து $53 மில்லியன் டாலர் மதிப்புடன் உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications