இந்தியாவின் பல கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனிபோடும் விதமான ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் தற்போது தவிர்க்க முடியாத விளையாட்டுப் போட்டியாக மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் பிரிவாக மாறியுள்ளது.
இதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஎல் அணியை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படியென்றால் ஐபிஎல் போட்டிகள் மூலம் ஒரு பிரான்சைஸ் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டுகிறது..? எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது..?
இதைப் புரிந்துகொள்ள 2008 முதல் துவங்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
8 ஐபிஎல் அணி
2008ல் முதல்முறையாக 8 ஐபிஎல் அணிகளைப் பிரான்சைஸ் நிறுவனங்கள் கைப்பற்றியது. இந்த விற்பனையில் பிசிசிஐ 2,900 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றது. 14 வருடத்திற்கு முன் நடந்த இந்த ஏலத்தின் போது ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 40 ரூபாய்.
ஏலம்
இந்த ஏலத்தில் அதிக மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்ட அணி மும்பை இந்தியன்ஸ் 111.9 மில்லியன் டாலர், குறைவான மதிப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 67 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அணியைக் கைப்பற்றிய பிரான்சைஸ் நிறுவனங்கள் செலவு செய்வதில் பல ஐடியாக்களை வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்
உதாரணமாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சிறந்த வீரர்களை அதிகத் தொகை கொண்டு வாங்கும் வழக்கத்தை வைத்துள்ளது. இதேபோல் பலர் பல ஐடியாக்களில் இயங்கி தொடர்ந்து தங்களது ஐபிஎல் அணியைத் தக்க வைத்து வருகின்றனர்.
புனே, கொச்சி
2 வருடங்களுக்குப் பின்பு ஐபிஎல் நிர்வாகம் சாஹாரா புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய இரு அணிகளைச் சுமார் 3,230 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது, ஆனால் இரு அணிகளும் தனிப்பட்ட முறையில் பல காரணங்களுக்கான ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறினர்.
மீண்டும் இரு அணிகள்
11 வருடத்திற்குப் பின்பு மீண்டும் ஐபிஎல் நிர்வாகம் தற்போது இரு புதிய அணிகளை மீண்டும் விற்பனை செய்துள்ளது, அகமதாபாத் அணியை 5,625 கோடி ரூபாய்க்கும் லக்னோ அணியை 7,090 கோடி ரூபாய் என் மொத்த 12,715 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது பிசிசிஐ.
பிசிசிஐ வருமானம்
சரி நாம் விஷயத்திற்கு வருவோம், 2008ல் 8 ஐபிஎல் அணிகள் இருக்கும் போது பிசிசிஐ ஐபிஎல் போட்டியின் 10 வருட ஒளிபரப்பு ஒப்பந்தத்தை 8,200 கோடி ரூபாய்க்கும், டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை 200 கோடி ரூபாய்க்கு DLF நிறுவனத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 8,400 கோடி ரூபாய் பிசிசிஐ வருமானத்தைப் பெற்றுள்ளது.
distribution model
இந்நிலையில் அடுத்த 10 வருடத்தில் மொத்த வருமானம் தனிப்பட்ட distribution modelலில் பகிரப்படும். அதாவது
முதல் 3 வருடத்திற்குப் பிரான்சைஸ்-க்கு 80% - பிசிசிஐ-க்கு 20%
அடுத்த 3 வருடத்திற்குப் பிரான்சைஸ்-க்கு 70% - பிசிசிஐ-க்கு 30%
அடுத்த 3 வருடத்திற்குப் பிரான்சைஸ்-க்கு 60% - பிசிசிஐ-க்கு 40%
10வது வருடத்தில் பிரான்சைஸ்-க்கு 50% - பிசிசிஐ-க்கு 50%
நடைமுறை
10வது வருட மாடல் தான் தற்போது நடைமுறையில் உள்ளது, ஐபிஎல் போன்ற போட்டிகள் இந்தியாவிற்கும் சரி, பிரான்சைஸ் நிறுவனங்களுக்கும் சரி புதியது என்பதால் இந்த வருமான பகிர்வு அளவில் அதிகளவிலான லாபத்தைப் பிரான்சைஸ் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டது.
முதல் 6 வருடம்
ஆனால் முதல் 6 வருடம் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் அவர்களுக்கான திட்டத்தை வகுப்பதும், விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்வதிலும் அதனை மாற்றுவதிலும் அதிகச் செலவுகளைச் செய்தது. இதனால் பெரிய அளவிலான லாபத்தைப் பார்க்க முடியவில்லை.
வேகமான வளர்ச்சி
ஐபிஎல் மற்றும் அதன் முக்கியத்துவம் இந்தியாவில் வேகமாக வளர துவங்கிய காரணத்தால் 2017ல் ஸ்டார் இந்தியா கைப்பற்றிய 5 வருட ஒளிபரப்பு ஒப்பந்தம் 16,347 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, டைட்டில் ஸ்பான்சர் ஆக விவோ 2200 கோடி ரூபாய்க்கும், அபீசியல் பார்னர் என 4 நிறுவனங்கள் தலா 40 கோடி ரூபாயும் பெற்றது.
2022க்குப் பின்
இதன் 2008ல் பிசிசிஐ வெறும் 8,400 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்ற நிலையில், 2017ல் 19,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போது இரண்டு புதிய அணிகள், புதிதாக 5 வருட ஒளிப்பரப்பு ஒப்பந்தம் ஆகியவை வருவதன் மூலம் ஐபிஎல் வர்த்தகம் இந்த ஆண்டு 25,000 கோடி ரூபாயைத் தாண்டும்.
விசித்திரமான வர்த்தக மாடல்
ஐபிஎல் ஒரு விசித்திரமான வர்த்தக மாடல், அதாவது ஒரு ஐபிஎல் அணியை வாங்கும் நிறுவனம் அந்தப் பணத்தை மொத்தமாகச் செலுத்த வேண்டியது அவசியம் இல்லை, 10 வருடத்தில் செலுத்தினால் போது, ஆனால் அதேபோல் இந்தத் தொகைக்கு எவ்விதமான வட்டியும் இல்லை.
வருமானம் கிடைக்கும்
அனைத்திற்கும் மேலாக முதல் வருடத்தில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கத் துவங்கிவிடும். உதாரணமாகப் பிசிசிஐ 9750 கோடி ரூபாய் வருமானம் பெறுகிறது என்றால் 50:50 பங்கீடு மூலம் 8 ஐபிஎல் அணிகளுத்தும் அதே அளவிற்கான தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
இதன் மூலம் ஒரு ஐபிஎல் அணி 5 வருடத்திற்குத் தலா 1,218 கோடி ரூபாய், அதாவது ஒரு வருடத்திற்கு 244 கோடி ரூபாய். இது 2018 முதல் 2021 வரையில் கிடைத்த வருமான அளவீடுகள்.
சென்ட்ரல் மற்றும் லோக்கல்
அதேபோல் ஒரு ஐபிஎல் போட்டிக்கு இரு பிரிவின் கீழ் வருமானம் கிடைக்கும் சென்ட்ரல் மற்றும் லோக்கல். இதுவரை நாம் பார்த்தது சென்டர்ல் வருமானம். லோக்கல் வருமான பிரிவில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு யுக்தியை பயன்படுத்தி இயங்கி வருகிறது.
லோக்கல் வருமான பிரிவு
லோக்கல் வருமான பிரிவில் டிக்கெட் விற்பனை, ஜெர்ஜி ஸ்பான்சர்ஷிப், ஹாஸ்பிடாலிட்டி போன்றவை இதில் அடங்கும். மும்பை இந்தியன்ஸ் இப்பிரிவின் கீழ் சுமார் 50 கோடி ரூபாய் ஈட்டும் நிலையில் பல ஐபிஎல் அணிகள் திணறி வருகிறது.
கேட் கட்டணம்
இதேபோல் ஒரு போட்டிக்குக் கேட் கட்டணமாக மட்டுமே 2.5 கோடி முதல் 3.5 கோடி ரூபாய் வரையில் கிடைக்கும். தோராயமாக இடம், அணி, டிக்கெட் விற்பனை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஐபிஎல் அணி ஒரு வருடத்திற்கு 40 முதல் 70 கோடி ரூபாய்ப் பெறுகிறது.
ஐபிஎல் அணி
இதன் மூலம் ஒரு ஐபிஎல் அணி வெற்றி பெற்றாலும், தோற்றாலும் சென்டரல் மற்றும் லோக்கல் வருமானத்தின் மூலம் வருடத்திற்கு 244 + 50 கோடி ரூபாய் என மொத்த 295 கோடி ரூபாய்ப் பெறுகிறது. வருமானத்தைப் பார்த்தாச்சு செலவுகளும் இருக்குப் பாஸ்.
செலவுகள்
ஒவ்வொரு அணியும் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு வருடத்திற்கு 90 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல் ஆப்ரேஷன்ஸ் மற்றும் இதர பணிகளுக்காக 35 முதல் 50 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும், அப்படிப் பார்த்தால் ஒரு வருடத்திற்கு 130 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.
ஸ்டேட் அசோசியேஷன்
இதேபோல் ஸ்டேட் அசோசியேஷனுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 50 லட்சம், அதாவது 7 ஹோம் கிரவுண்ட் போட்டிகளுக்கு 3.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதேபோல் பிசிசிஐ-க்கு உள்நாட்டில் நடத்தப்படும் போட்டிகளுக்காக டாப்லைன் வருவாயில் 20 சதவீதம் கொடுக்க வேண்டும். இது 12 முதல் 15 கோடி ஸூபாய் வரும்.
145 கோடி ரூபாய் செலவு
எனவே ஒரு ஐபிஎல் சீசனுக்கு ஐபிஎல் அணிகள் சுமார் 145 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்குப் பின்பு வருமான வரி உள்ளது. எப்படிப் பார்த்தாலும் வருடத்திற்கு 150 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும், இதற்கு வரி செலுத்த வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
மேலும் தற்போது குறிப்பிடப்பட்ட அளவுகள் அனைத்தும் குறைந்தபட்ச அளவுகள் மட்டுமே, அணிகள் பொருத்து அனைத்தும் மாறுபடும். உதாரணமாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கேகேஆர் அணிகள் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பார்க்கிறது.
2022க்குப் பின் பெரும் எதிர்பார்ப்பு
இதைத் தொடர்ந்து 2022க்கு பின்பு ஐபிஎல் வர்த்தகம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது இரு புதிய அணிகள், ஒளிபரப்பு ஏலத்தில் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இறங்குவது என மிகப்பெரிய போட்டியைச் சந்திக்க உள்ளது. இதனால் மொத்த ஐபிஎல் வர்த்தகம் 25,000 கோடி ரூபாயைத் தாண்ட அதிக வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications