ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் இத்தனை கோடி இழப்பா?

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்போது நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 125 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன . இதனால் பாதுகாப்பு கருதி ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாரம் முடிந்த பின்னர் மீண்டும் போட்டி தொடருமா அல்லது போட்டி அப்படியே நிறுத்தப்படுமா என்பது ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்யும்.

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் இத்தனை கோடி இழப்பா?

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தணிகிறதா அல்லது மேலும் அதிகரிக்கிறதா பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்படும். தற்போது ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு விளையாட்டின் மூலமும் பிசிசிஐக்கு 100 முதல் 125 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் நிர்வாகக் குழு என்பது பிசிசிஐயின் ஒரு அமைப்பாகும் . இந்த அமைப்புதான் ஐபிஎல் போட்டிகளை முழுமையாக நிர்வகித்து வருகிறது. இந்த குழு ஐபிஎல் அணிகள் இடமும், அணிகளின் உரிமையாளர்களிடமும் போட்டி ஏழு நாட்கள் முடிந்து தொடங்கலாம் அல்லது அப்படியே நிறுத்தவும் படலாம் என்பதால் எதற்கு வேண்டுமானாலும் தயாராக இருங்கள் என கூறி இருக்கிறதாம்.

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் குடும்பத்தினரோடு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். தற்போதைக்கு போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் வீரர்கள் சொந்த நாட்டிற்கு சென்று விட்டதாகவும் போட்டி தொடர்பான அடுத்த அறிவிப்பு வரும்போது அவர்கள் திரும்ப வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஒருவேளை தற்போதைக்கு ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டால் மீதமுள்ள போட்டிகளை வரும் ஆகஸ்டில் இருந்து செப்டம்பர் மாதம் ஆகிய இரண்டு மாதங்களில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது . இந்த ஆண்டு போட்டி முழுவதுமாகவே நிறுத்தப்படுகிறது எனும் போது இந்த ஐபிஎல் போட்டி சார்ந்த அனைத்து வணிகமும் பாதிக்கப்படும்.

பிசிசிஐ ஐபிஎல் போட்டிக்காக பெற்றிருக்கும் ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர் கட்டணங்களில் கணிசமான தொகையை குறிப்பிட்டு நிறுவனங்களுக்கு திரும்ப வழங்க நேரிடலாம். குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அவற்றை திரும்ப வழங்க வேண்டிய சூழல் உண்டாகும்.

மேலும் ஐபிஎல் போட்டிகள் தொடர்பான தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும். பிளே ஆஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இன்னும் நடைபெற வேண்டி இருக்கிறது. போட்டிகள் தடைப்பட்டு இருப்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் அதற்குரிய இழப்பீடை தந்தாலும் இந்த பிரச்சனையில் அதிக இழப்பை சந்திப்பது பிசிசிஐ, ஒளிப்பதிவு உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஸ்பான்சர் கொடுத்த நிறுவனங்கள் ஆகியவைதான்.

FAQs
தற்போது போட்டி முழுவதுமாக நிறுத்தப்பட்டால் எப்போது போட்டி நடக்க வாய்ப்புள்ளது?

தற்போதைக்கு ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டால் மீதமுள்ள போட்டிகளை வரும் ஆகஸ்டில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது .

ஐபிஎல் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு எத்தனை கோடி இழப்பு ?

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் மூலமும் பிசிசிஐக்கு 100 முதல் 125 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

ஐபிஎல் போட்டிகள் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன?

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+