ஒரு போட்டிக்கு ரூ.100 கோடி: உச்சத்துக்கு சென்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை

உலகிலேயே பணம் கொழிக்கும் விளையாட்டுகளில் ஒன்றான ஐபிஎல் போட்டியின் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் பெறுவதற்கான ஏலம் நேற்று தொடங்கியது.

நேற்றைய முதல் நாளில் யாருமே எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஏலம் இன்று அல்லது நாளையுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

உலகிலேயே அதிக மக்கள் பார்க்கக் கூடிய விளையாட்டுக்களில் ஒன்றான ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு 10 அணிகள் விளையாடியதால் 74 போட்டிகள் கொண்ட தொடராக அமைந்தது. இந்த ஆண்டு தொடரில் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி டைட்டிலை வென்று அசத்தியது.

ஏலம்

ஏலம்

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எடுத்திருந்த நிலையில் இந்த ஆண்டுடன் அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை கோருவதற்கான ஏல அறிவிப்பை பிசிசிஐ கடந்த மாதமே வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

எந்தெந்த நிறுவனங்கள்?

எந்தெந்த நிறுவனங்கள்?

இந்த ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்காக ரிலையன்ஸ் வியாகாம், சோனி, டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான், ஜீ குழுமம் உள்பட ஒரு சில நிறுவனங்கள் உரிமை கோரின. இருப்பினும் அமேசான் கடைசி நேரத்தில் ஒதுங்கி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மற்ற நிறுவனங்கள் நேற்றைய ஏலத்தில் கலந்து கொண்டன. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமை ஏலம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிசிசிஐ உறுதி

பிசிசிஐ உறுதி

இந்த நிலையில் இந்த நான்கு பிரிவுகளில் உரிமைகளைப் பெறுவதற்காக நேற்று மும்பையில் நடந்த ஆன்லைன் வழியாக ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டது. குறிப்பாக இந்த ஆண்டு 74 போட்டிகளாக இருந்து ஐபிஎல் தொடர் வரும் ஆண்டுகளில் 80 முதல் 90 போட்டிகள் வரை அதிகரிக்கப்படும் என பிசிசிஐ உறுதி அளித்ததால் பணத்தை தண்ணீராக இறைக்க ஏலம் கேட்கும் நிறுவனங்கள் முடிவு செய்தன.

43,050 கோடி ரூபாய்

43,050 கோடி ரூபாய்

நேற்று ஏலம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஏலம் கேட்கப்பட்டது. அந்த வகையில் காலை 11 மணி முதல் 4 மணி வரை நடந்த ஏலத்தின் மொத்த தொகை 40 ஆயிரம் கோடியை கடந்தது என்பதும், நேற்றைய நாள் முடிவில் 6 மணி அளவில் 43,050 கோடியுடன் நிறைவு பெற்றது.

இரண்டரை மடங்கு அதிகம்

இரண்டரை மடங்கு அதிகம்

இதில் தொலைக்காட்சி உரிமை மட்டும் 23,000 கோடி என்றும் டிஜிட்டல் உரிமம் மட்டும் 19,000 கோடி என்றும் ஏலம் போயுள்ளது. இது கடந்த முறை ஏலம் போனதை விட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.60 ஆயிரம் கோடி

ரூ.60 ஆயிரம் கோடி

தற்போதைய நிலையில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான மதிப்பு ரூ.100 கோடியை கடந்துள்ள நிலையில் இன்று ஏலம் மேலும் தொடர உள்ள நிலையில் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி மொத்த ஏலத்தொகை ரூ.60 ஆயிரம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பிசிசிஐ நிர்வாகிகளே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+