அஷ்னீர் குரோவரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, புதிய ஸ்டார்ட்அப் ஃபேன்டஸி கிரிக்கெட் தளமான "கிரிக்பே" (CrickPe) எனும் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். இ
இது டிரீம்11 மற்றும் மொபைல் பிரீமியர் லீக் போன்றவற்றுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள இந்த நேரத்தில் அஷ்னீர் குரோவர் மிகவும் முக்கியமான திட்டத்துடன் கிரிக்பே என்னும் மாபெரும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
கிரிக்பே!
ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், Third Unicorn Pvt Ltd என்னும் நிறுவனம் ஃபேன்டஸி கிரிக்கெட் தளமான கிரிக்பே எனும் தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Third Unicorn நிறுவனத்தின் தலைவர் அஷ்னீர் க்ரோவர்.
ஃபேன்டஸி கிரிக்கெட் கேம்
ஆன்லைன் திறன் அடிப்படையிலான ஃபேன்டஸி கிரிக்கெட் கேம்களுக்கான தளமான கிரிக்பே, மற்ற கேமிங் தளங்களைப் போலவே உள்ளது. இதை அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளார் அஷ்னீர் க்ரோவர்.
ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு ரொக்கம் பணம் பரிசு!
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கேமிங் ஆப் மூலம் விர்ச்சுவல் கிரிக்கெட் விளையாடும் பயனர்கள் பாயின்ட்ஸ் பெறுவது மட்டும் அல்லாமல் வெற்றி பெற்றால் அவர்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு தாங்கள் விரும்பும் பணத்தை கொடுக்கலாம் எனக் யூவர்ஸ்டோரி தெரிவித்துள்ளது.
அந்த பணத்தை கிரிக்கெட் வீரர் ஏற்கவில்லை என்றால் Crickpe அதை பயனர்களுக்கு கேஷ்பேக்காக விநியோகிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Crickpe இணையதளம்
Crickpe இன் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, ஒரு நிதியாண்டில் ஒரு கிரிக்கெட் வீரருக்கு பயனர்கள் ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசுகளை வழங்க முடியும், ஆனால் அந்தச் சலுகையை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது கிரிக்கெட் வீரரின் விருப்பமாக இருக்கும் என யூவர்ஸ்டோரி தெரிவித்துள்ளது.
வரி மற்றும் கட்டணங்கள்
ஒரு கிரிக்கெட் வீரர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், பண வெகுமதியானது பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் 10% செயலாக்கக் கட்டணங்களுக்கு உட்படும் எனவும் விளம்பரச் சலுகையாக, ஜூன் வரை செயலாக்கக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனவும் Crickpe இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நோக்கம் எதுவுமில்லை!
இந்த ரொக்கப் பணம் தொடர்பாக கிரிக்பே இணையதளத்தில் கூறப்படுவது என்னவென்றால், நாங்கள் கிரிக்கெட் வீரர்களின் முகவர்களாகச் செயல்படவில்லை, அவர்கள் சார்பாக எந்தப் பணத்தையும் வசூலிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள் இருக்கவில்லை. Crickpe இந்த பண வெகுமதியை வழங்குவதில் உங்கள் (பயனர்களின்) முகவராக மட்டுமே செயல்படும் என குறிப்பிட்டுள்ளது.
90 நாட்கள்
மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் பயனர் அனுப்பும் பணத்தை நிராகரித்தாலோ அல்லது 90 நாட்களுக்கு அதை ஏற்றுக்கொள்ளவிலை என்றாலும், எந்தக் கழிவும் இல்லாமல் கிரிக்பே பயனரின் கணக்கில் பணத்தைத் திருப்பித் தருவதாக Crickpe கூறுகிறது.
பாரத்பே முதல் கிரிக்பே வரை!
குரோவர் அக்டோபர் 2018 இல் பாரத்பேயில் (BharatPe) இணை நிறுவனராக சேர்ந்தார். அதன்பின் grofers இல் CFO ஆகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் 40 ஆவது வயதில் மூன்றாவது யுனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி உடன் Third Unicorn Pvt Ltd என்ற நிறுவனத்தை உருவாக்கி தற்போது கிரிக்பே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications