ஜியோ திங்கட்கிழமை ஒரு புதிய பிராட்பேண்ட் "பேக்கப்" திட்டத்தை அறிவித்தது. இந்த பிரத்தியேக திட்டம் ஜியோ பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இணைப்பு மற்றும் தடையற்ற ஸ்ட்ரீமிங்க் சேவையை உறுதியளிக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை விரிவாக்கத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வரும் இதே வேளையில், பிராட்பேண்ட் சேவையிலும் அதிக ஈடுப்பாட்டை காட்டி வருகிறது.
இவ்விரு பிரிவு வாடிக்கையாளர்கள், வர்த்தகம், வருமானம் என அனைத்தையும் மேம்படுத்த ஐபிஎல்-ஐ முக்கிய கருவியாக பயன்படுத்த உள்ளார் முகேஷ் அம்பானி. இந்த மாஸ்ட் பிளானின் ஒரு பகுதி தான் பிராட்பேண்ட் "பேக்கப்" திட்டம்.
ஐபிஎல் போட்டி
ஒட்டுமொத்த இந்தியாவும் ஐபிஎல் போட்டிக்காக காத்திருக்கும் நிலையில், இந்த வருடம் டிஸ்னி நிறுவனத்திடம் இருந்த ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை பெரும் தொகைக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை வைத்து பெரும் வர்த்தகத்தை பார்க்க வேண்டும் என்பது முகேஷ் அம்பானி திட்டம்.
FIFA உலக கோப்பை
FIFA உலக கோப்பையை ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீம் செய்து அனுபவம் பெற்ற ஜியோ, பல முன்னேற்பாடுகள் உடன் அடுத்து இந்திய மக்கள் கொண்டாடும் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து தரப்பினருக்கும் ஜிபிஎல் கொண்டு சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு உள்ளார் முகேஷ் அம்பானி.
பிராட்பேண்ட் "பேக்கப்" திட்டம்
ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக புதிய பிராட்பேண்ட் "பேக்கப்" திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 30 முதல் புதிய திட்டம் கிடைக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
புதிய கான்செப்ட்
ஜியோ தனது புதிய சேவையை பேக்-அப் இணைப்ப என்ற புதிய கான்செப்ட் கீழ் வழங்குகிறது. பொதுவாக சில வீடுகளில் இண்டர்நெட் இணைப்பு சிறப்பாக இருக்காது, இதற்காக ஒரு மாற்று பிராட்பேண்ட் இணைப்பை மலிவு விலையில் டோட்டா உறுதியுடன் வழங்குகிறது ஜியோ.
தடையின்றி ஸ்ட்ரீமிங்
புதிய பிராட்பேண்ட் "பேக்கப்" திட்டத்தின் கீழ் ஒரு வாடிக்கையாளர்கள் அதிக வேகத்திற்கு தடையின்றி ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்தலாம். இது மட்டும் அல்லாமல் இந்த திட்டத்திற்கான கட்டணம் மாதம் 198 ரூபாய். ஆனால் இத்திட்டம் மொத்தமாக 5 மாதத்திற்கு தான் அளிக்கப்படுகிறது.
கட்டணம், சேவைகள்
புதிய பிராட்பேண்ட் "பேக்கப்" திட்டத்தின் கீழ் 550 லைவ் சேனல், 14 ஓடிடி ஆப்கள், இலவசமாக 4k செட் டாப் பாக்ஸ் ஆகியவற்றை 5 மாதத்திற்கு 1490 ரூபாய் தொகைக்கு வழங்குகிறது. இதில் 500 ரூபாய் இன்ஸ்டாலேஷன் கட்டணம்.
மாதம் 198 ரூபாய்
மாதம் 198 ரூபாய் என்றால் யார் தான் வாங்கமாட்டார்கள், அதுவும் ஐபிஎல் வரும் நேரத்தில் ஜியோ திட்டமிட்டு இந்த சேவையை அளித்துள்ளது மூலம் கட்டாயம் பிராட்பேண்ட் சேவையில் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications