உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் என்று போற்றப்படும் ஐபிஎல் (IPL) அடுத்த சில வாரத்தில் துவங்க உள்ளதால் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே காரசாரமான விவாதம் துவங்கியுள்ளது. ஐபிஎல் அணிகளும், ஐபிஎல் நிர்வாகமும் ஸ்பான்சர்களை தேட துவக்கியுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும். ஆம் ஐபிஎல் போட்டியை நடத்தும் BCCI அமைப்பு ஒவ்வொரு வருடமும் பெறும் லாபத்திற்கு வரி செலுத்த தேவையில்லை, ஆனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் நபர்கள் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு IISc பெங்களூரு கல்லூரி பேராசிரியர் மயங்க் ஸ்ரீவாஸ்தவா செய்த சமூக வலைத்தள பதிவு இன்றளவும் சமூக வலைத்தளத்தில் விவாதத்தை தூண்டி வருகிறது.
ஐபிஎல் லாபத்திற்கு 40% வரி விதித்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.15,000 கோடி வரை வசூலிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த தொகை 10 புதிய ஐஐடிகளை உருவாக்க அல்லது தேசிய டீப்-டெக் புதுமை நிதியை உருவாக்க போதுமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் மயங்க் ஸ்ரீவாஸ்தவா தனது பதிவில், பிசிசிஐ (BCCI) ஐபிஎல் லாபத்தில் 40% வரி விதித்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.15,000 கோடி கிடைக்கும் என்றும், ஃபிரான்சைசி அணிகளின் லாபத்தில் (வருடத்திற்கு ரூ.800-ரூ.1,200 கோடி) வரி விதித்தால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.320-ரூ.480 கோடி கிடைக்கும் என்றும் கணக்கிட்டுள்ளார்.
இந்த வரி பணத்தை வைத்து ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வரையிலான தொகையை இந்திய ஆராய்ச்சி மற்றும் இன்னோவேஷன் துறையில் முதலீடு செய்யப்படும் என்று தனது பதிவில் வலியுறுத்துகிறார். மேலும் அவருடைய 2025ஆம் ஆண்டு பதிவில் இந்த தொகையை வைத்து 10 புதிய ஐஐடிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் வரி செலுத்த தேவையில்லை..?
பிசிசிஐ ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதால், வருமான வரி விலக்கு பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவது மூலம் கிடைக்கும் லாபம் மீது வரி செலுத்துவதில்லை. பில்லியனர்களால் நடத்தப்படும் ஃபிரான்சைசி அணிகளும் சலுகைகளை பெறுகின்றன. ஆனால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கு மட்டுமே தனிப்பட்ட வரி விதிக்கப்படுகிறது.
2024 நிதியாண்டில் ஐபிஎல் வருவாய் ரூ.5,700 கோடிக்கு மேல் இருந்தது. பிசிசிஐயிடம் ரூ.20,000 கோடிக்கு மேல் நிதி இருப்பு உள்ளது, ஆனால் வருமான வரி செலுத்தப்படுவது இல்லை. இதே நேரத்தில் சாதாரண மக்கள் ஊதிய வரி, ஜிஎஸ்டி, மூலதன ஆதாய வரி, சொத்து வரி, எரிபொருள் வரி, சாலை வரி போன்றவற்றை செலுத்துகின்றனர் என விநாயக் சேத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சுற்றுலா, வேலைவாய்ப்பு, ஜிஎஸ்டி வருவாய் உருவாக்குவதாக இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது உண்மைதான். ஆனால் இதே போன்று இந்தியாவில் உள்ள பிற லாபம் ஈட்டும் தொழில்களும் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. அவற்றுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஏன் ஐபிஎல் மட்டும் விலக்கு பெற வேண்டும் என்ற கேள்வியையும் விநாயக் சேத் எழுப்பியுள்ளார்.
விநாயக் சேத் பதிவின் மூலம் மீண்டும் IISC பேராசிரியர் மயங்க் ஸ்ரீவாஸ்தவாவின் 2025 பதிவு தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications