நாளுக்கு நாள் வங்கி சேவைகள் டிஜிட்டல் முறையில் எளிதாக மக்களுக்குக் கிடைத்து வரும் நிலையில், தற்போது வங்கிகளில் கிடைக்கும் சேவைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இன்று வெளியான அறிவிப்பின் படி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஜனவரி முதல் செய்யப்பட்டும் கேஷ் டெபாசிட் மற்றம் வித்டிரா-வுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவிப்பின் படி பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட்-ல் 4 முறை இலவசமாகக் கேஷ் வித்டிரா செய்துகொள்ளலாம், அதன் பின்பு ஒவ்வொரு முறையும் தத்தம் தொகையில் 0.50 சதவீதம் அல்லது குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூலிக்கப்படும்.
பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட்
மேலும் பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட்-ல் செய்யப்பட்டும் டெபாசிட் முற்றிலும் இலவசம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் கிராமம் மற்றும் சிறிய டவுன் பகுதியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்குப் பெரிய அளவில் உதவும்.
வித்டிரா
பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட் அல்லாத பிற சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளுக்கு மாதம் 25000 ரூபாய் வரையிலான வித்டிரா மட்டுமே இலவசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 25000 ரூபாய்க்கு அதிகமான தொகை டெபாசிட் மற்றும் வித்டிரா செய்ய வேண்டும் என்றால் 0.50 சதவீதம் அல்லது குறைந்துபட்ச தொகையாக 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூலிக்கப்படும்.
டெபாசிட்
இதேபோல் பேசிக் சேவிங்கஸ் அக்கவுன்ட் அல்லாத பிற சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளுக்கு மாதம் 10000 ரூபாய் வரையிலான டெபாசிட் மட்டுமே இலவசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10000 ரூபாய்க்கு அதிகமான தொகை டெபாசிட் மற்றும் வித்டிரா செய்ய வேண்டும் என்றால் 0.50 சதவீதம் அல்லது குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாய் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் வசூலிக்கப்படும்.
ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி
புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள கட்டணம் கணக்கிட்ட பின்பு ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி விதிக்கப்படும். இந்தப் புதிய கட்டணம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி -யில் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் பெரும் பாதிப்பாக உள்ளது.
20 ரூபாய் கட்டணம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகஸ்ட் 1, 2021 முதல் டோர்ஸ்டெப் வங்கி சேவையை 20 ரூபாய் கட்டணத்தில் அளிக்கத் துவங்கியுள்ளது. மேலும் ஜூலை 1 முதல் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications