சேமிப்பு கணக்குகளை மூடுவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அறிவித்துள்ளது.
அஞ்சலகத்தின் வங்கி பிரிவான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு அதன் விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இதற்கிடையில் தான் சேமிப்பு கணக்குகளை மூடுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு கட்டணம்?
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கினை மூட வேண்டுமெனில், அதற்கு தனியாக 150 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அஞ்சலகத்தின் இந்த கட்டண முறை மார்ச் 5ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கே.ஓய்.சி இல்லாமல், ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலமாக தொடங்கப்படும் கணக்குகள்
இது ஆன்லைன் மூலமாக தொடங்கப்படும் கணக்கிற்கு ஒரு வருடத்திற்குள் கேஓய்சி சரிபார்ப்பினை செய்ய வேண்டும். அப்படி அவசரத்திற்கு ஆன்லைனில் தொடங்கும் சேமிப்பு கணக்குகளுக்கு , பலரும் கேஓய்சி அப்டேஷனை செய்வதில்லை. இதற்கிடையில் தான் அஞ்சலகம் இப்படி அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
யாருக்கு இந்த கணக்கு?
மேலும் இந்த கட்டணமானது குறிப்பாக ஆன்லைன் மூலமாக தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டுமே, இந்த கட்டணம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு கணக்குகள் குறைந்த வருவாய் உள்ள சாமானிய மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டாலும், தற்போதைய காலகட்டங்களில் வங்கிகளில் பெறும் அனைத்து சேவைகளையும் பெறலாம் என்பதால், நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.
யாரெல்லாம் தொடங்கலாம்?
இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கினை 18 வயதிற்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். எனினும் இந்த டிஜிட்டல் கணக்கினை தொடங்க கட்டாயம் ஆதார் கார்டு மற்றும் பான் எண்ணும் அவசியம். இந்த டிஜிட்டல் கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு என்பது தேவையில்லை. இது மிகப்பெரிய நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கில் இருப்பு 1 லட்சம் ரூபாய்க்கு கீழாக இருந்தால், வட்டி விகிதம் 2.25% வழங்கப்படுகிறது. இதே 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்பு தொகைக்கு 2.50% வட்டியாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் இந்த டிஜிட்டல் கணக்கு தொடங்கினாலும், 1 வருடத்திற்குள் kyc அப்டேட் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இது ரெகுலர் சேமிப்பு கணக்காக மாறிவிடும்.
என்னென்ன வசதிகள்
எனினும் வருடத்திற்கு இந்த கணக்கில் 2 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கில் ஓவர்டிராப்ட் மற்றும் டெபிட் கார்டு வசதியும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசின் கீழ் தபால் துறை கட்டுப்பாட்டில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட்டு வருகின்றது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications