அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எல்பிஜி (LPG) விநியோகத்தை உறுதிசெய்ய புதிய ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்தியக் கொடியுடன் இயங்கும் இரண்டு எரிவாயு கப்பல்கள் Strait of Hormuz வழியாக பயணம் செய்து இந்தியாவுக்கு வருவதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

இந்தியக் கப்பல்கள்
Jag Vasant மற்றும் Pine Gas என்ற இரண்டு மிகப்பெரிய எல்பிஜி கப்பல்கள், UAE கடற்கரையிலிருந்து வடக்கு திசையில் பயணம் செய்து, ஈரான் கடற்கரைக்கு அருகிலுள்ள Qeshm Island மற்றும் Larak Island பகுதிகளை ஒட்டிய வழித்தடத்தை தேர்வு செய்துள்ளன.

இந்த வழி, ஈரான் அனுமதியுடன் இயங்கும் கப்பல்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான பாதையாக கருதப்படுகிறது. மேலும், இந்த கப்பல்கள் தங்களின் இலக்கு துறைமுகத்தை குறிப்பிடாமல், ஈரான் அரசு இந்திய கப்பல்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையை மட்டும் சுட்டிக்காட்டும் சிக்னலை பயன்படுத்தி பயணிக்கின்றன. இது பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இந்தியாவில் தற்போது எல்பிஜி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியா Iran உடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதேபோன்ற மேலும் இரண்டு இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணை, வளைகுடா பகுதியை உலக சந்தைகளுடன் இணைக்கும் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீதுமேற்கொண்ட தாக்குதல்களுக்கு பிறகு, இந்த வழித்தடம் செயல்பாடுகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரான் தரப்பில் இருந்து கப்பல் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக, இந்த பாதை பெரும்பாலும் மூடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த கடினமான சூழ்நிலையில், இந்தியா பேச்சுவார்த்தை மூலம் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதிசெய்ய முயற்சி செய்து வருகிறது. ஈரான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து, குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் இந்த முக்கிய வழித்தடத்தை பயன்படுத்தி வருகிறது.

ஹார்முஸ் நீரிணையை கடக்க பொதுவாக 14 மணி நேரம் வரை ஆகும். Jag Vasant மற்றும் Pine Gas கப்பல்கள் தடையின்றி பயணம் தொடர்ந்தால், அவை Gulf of Oman பகுதியில் மாலை நேரத்திற்குள் சென்று சேரும் என கணிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+