உலகிற்கு தேவையான பெருமளவிலான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்கள் வளைகுடா நாடுகளில் இருந்து தான் உற்பத்தி செய்து அனைத்து நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. சவுதி உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கின்றன. இந்த கப்பல்கள் ஈரானுக்கு அருகே இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜல சந்ததி வழியாக தான் வெளியே வர முடியும்.
போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. தங்களுடைய அனுமதி இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றால் அது எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் அதனை மூழ்கடிக்கச் செய்வோம் என ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கப்பல்கள் வளைகுடா நாடுகளிலேயே தேக்கமடைந்து விட்டன. கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்கள் 10 நாட்களுக்கும் மேலாக இந்தியாவுக்கு வரவில்லை.

இதனால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடையும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடைக்காத நிலையில் மூன்றாவது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதி வழங்குவது என ஈரான் அறிவித்திருக்கிறது. எனவே முதல்கட்டமாக இந்தியாவுக்கு சொந்தமான புஷ்பக், பரிமல் ஆகிய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்துள்ளன.

இந்திய கொடி ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் 10 நாட்களுக்கு பின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பையை வந்தடைந்து இருப்பதாக கார்டியன் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டு போயிருக்கக்கூடிய சூழலில் இந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் வந்து சேர்ந்திருப்பது மிகப்பெரிய ஒரு நிவாரணமாக அமைந்திருக்கிறது.
ஈரான் இந்தியா கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கப்படும் என அறிவித்திருப்பதால் அடுத்தடுத்து அரபு நாடுகளில் தேங்கி இருக்கும் இந்திய எண்ணெய் கப்பல்கள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்கூட்டியே ஈரான் ராணுவத்திடமும் ஈரான் அரசாங்கத்திடமும் அனுமதி பெற்று இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக இந்த வழியாக இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த கப்பல்களின் வருகையும் ரஷ்யாவில் இருந்து வரும் கச்சா எண்ணெயும் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருட்கள் தட்டுப்பாட்டை நீக்கும். அந்த வகையில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி.


Click it and Unblock the Notifications