ஈரான் மற்றும் ஈரான் உடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகள் மீது 2ஆம் நிலை கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், ஈரான் மீண்டும் ஓமான் நாட்டுடன் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளும் ஹார்முஸ் வழித்தடத்தில் எப்படி கப்பல்களை இயக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுத்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததால் ஈரான் - ஓமான் மத்தியில் பேச்சுவார்த்தை முடங்கியது.

இத்தகைய நிலையில் தான் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது, இதில் ஹார்முஸ் நீரிணையை இரு நாடுகளும் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதம் ஆவது மட்டும் அல்லாமல் போர் நிறுத்ததிற்கான தீர்வுகள் எட்டப்படாமல் உள்ளது. இதன் மூலம் தற்காலிக வழித்தடத்தில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து துவங்க இரு நாடுகள் முடிவு செய்திருக்காலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வழித்தடத்தில் போக்குவரத்தை துவங்குவதற்கு முன்பு இவ்வழித்தடத்தில் இருக்கும் கண்ணிவெடிகளை நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் டிரம்ப் பல முறை இப்பகுதியில் கண்ணிவெடிகள் இல்லை என கூறியுள்ளார், சமீபத்தில் கூட ஒரு எண்ணெய் கப்பல் கண்ணிவெடி மூலம் பாதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஓமான் நாட்டின் Ash Shishah பகுதியில் சுமாக் 17 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கப்பல் அனுமதி இல்லாமல் சென்ற காரணத்தால் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டு முடங்கியது. இதை பிரிட்டன் நாட்டின் கடல்வழி கண்காணிப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் அச்சம் காரணமாக ஹார்முஸ் வழித்தடத்தில் சரக்கு கப்பல் போக்குவரத்து என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக பகுதியாக இருக்கும் ஹார்முஸ் முடங்கி வைக்கப்பட்டு உள்ள காரணத்தால் ஏற்றுமதி மட்டும் அல்லாமல் இறக்குமதியும் கடுமையாக பாதித்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்கா பல வழிகளில் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முற்சிகளை எடுத்து வருகிறது. மறுமுனையில் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் விதிகமாக டிரம்ப் அரசு எக்னாமிக் டி-டே என்ற பெயரில் கடுமையான தடைகளை விதிக்க தயாராகியுள்ளது.
அமெரிக்காவில் மிரட்டல் காரணமாக கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 2.79 சதவீதம் சரிந்து 80.06 டாலராக குறைந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.97 சதவீதம் குறைந்து 85.95 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications