மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் இந்தியாவுக்கு காட்டிய பச்சை கொடி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் - எரிவாயு வர்த்தகத்திற்கு முக்கியமான பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஈரான் இடையிலான நட்புறவை முன்னிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்திய கச்சா எண்ணெய் - எரிவாயு கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யப்படும் என்று இந்தியாவில் உள்ள ஈரான் தூதர் முகம்மது ஃபதாலி தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகும். வளைகுடாவை உலக சந்தைகளுடன் இணைக்கும் இந்த குறுகிய கடல் பாதை வழியாக உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல்கள் பயணம் செய்கின்றன.
இந்த சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகம்மது ஃபதாலி, இந்தியாவுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பயணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்று துருக்கி கப்பல் இப்பாதை வழியாக எவ்விதமான தாக்குதலுக்கு உட்படாமல் சென்ற நிலையில், தற்போது இந்தியாவுக்கான அறிவிப்பு ஈரான் தூதர் வாயிலாக வந்துள்ளது.
இந்தியாவுக்கு பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆம், இந்தியா எங்களின் நட்பு நாடு. மிக விரைவில் இதை நீங்கள் பார்க்க முடியும்" என்று கூறினார். மேலும் சில மணி நேரங்களுக்குள் இதுகுறித்த முன்னேற்றங்கள், அறிவிப்புக்கான் வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக வலுவான நட்புறவு நிலவி வருகிறது. குறிப்பாக எரிசக்தி மற்றும் வர்த்தக துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அந்த எண்ணெய் சரக்குகளில் முக்கியமான பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவுக்கு வரும் வேளையில் ஈரான் இப்பாதையை மொத்தமாக கைப்பற்றிய காரணத்தால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாக பாதித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்று ஈரான் தரப்பில் வெளியான இந்த அறிவிப்பு, இந்தியாவுக்கான வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

உலகளாவிய எரிசக்தி போட்டி: டாப் 10 பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதா? வல்லரசுகளுடன் ஒரு ஒப்பீடு!

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தில் சிக்கலா? IRCTC வெளியிட்ட புது அறிவிப்பு

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!



Click it and Unblock the Notifications