மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல் கத்தாரின் முக்கிய எரிசக்தி அமைப்புகளை பெரிதும் பாதித்துள்ளது. உலகின் முன்னணி LNG ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான Qatar-இன் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி திறனில் சுமார் 17% பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக QatarEnergy நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹார்மூஸ் வழித்தடத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நெருக்கடியால் இந்தியாவுக்கு LNG சப்ளை தடைபெற்று எரிபொருளுக்கு பெரும் நெருக்கடி உருவாகியிருக்கும் வேளையில், தற்போது கத்தார் நாட்டின் உற்பத்தி மட்டத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போர் முடிந்தாலும் சிலிண்டர் பிரச்சனை தீராது என்பதை 17 சதவீத உற்பத்தி பாதிப்பு காட்டுகிறது.

ராஸ் லஃபான் தொழிற்சாலை சேதம்
ஈரான் தாக்குதலில் முக்கியமாக Ras Laffan Industrial City பகுதியில் உள்ள எரிசக்தி உற்பத்தி தளம் கடுமையாக சேதமடைந்துள்ளன. இந்த பகுதி கத்தாரின் LNG உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு மையமாக இருப்பதுடன், பல சர்வதேச நிறுவனங்களின் செயல்பாடுகளும் இங்கு நடைபெறுகின்றன.
ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பின் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கத்தார் பாதுகாப்பு படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆயினும் உற்பத்தி திறனில் பெரும் ஒட்டை விழுந்துள்ளது தான் தற்போதைய முக்கியமான பிரச்சனையாக உள்ளது.
QatarEnergy நிறுவனத்தின் CEO சாத் அல்-காபி அளித்த தகவலின்படி, இந்த சேதங்களை முழுமையாக சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். இது உலகளாவிய LNG விநியோகத்தில் நீண்டகால இடையூறுகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை கொடுத்துள்ளார்.

ரமலான் பண்டிகை
ரமலான் மாதத்தில் இப்படியொரு தாக்குதல் நடப்பது எதிர்பாராதது என்றும், குறிப்பாக ஒரு முஸ்லிம் நாடான ஈரான் இப்படிச் செயல்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் Saad al-Kaabi தெரிவித்துள்ளார்.
உலக எரிசக்தி சந்தை பாதிப்பு
Qatar உலகின் முக்கிய LNG ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருப்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக LNG விலை உயர்வு, விநியோக தட்டுப்பாடு மற்றும் நீண்டகால சப்ளை சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரான் வார்னிங்
இந்த தாக்குதலுக்கு முன், சவுதி அரேபியா, UAE மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் Ras Laffan Industrial City முக்கிய இலக்காக குறிப்பிடப்பட்டது.
எரிவாயு சந்தையில் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் LPG சிலிண்டர் விலை, CNG, PNG விலை உயரவும் வாய்ப்புள்ளது. காரணம் இந்தியாவுக்கான பெரும்பகுதி எரிவாயு கத்தார் நாட்டில் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications