5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா!

ஈரான் - அமெரிக்கா மத்தியில் 20 நாட்களாக பெரும் பதற்றத்திற்கு மத்தியில் போர் தாக்குதல் நடத்து வருகிறது, ஆனால் கடந்த 5 நாட்களாக எவ்விதமான தாக்குதலும் இல்லாமல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இறங்கியுள்ளது.

இதேவேளையில் அமெரிக்க அரசும், முதலீட்டு சந்தையும் பெடர்ல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை முடிவுகளுக்காக காத்திருக்கிறது. இத்தகைய இக்காட்டான சூழ்நிலையில் அமெரிக்கா உருவாக்கிய பணவீக்கம் என்னும் டைம்பாம்-ஐ 5 நாட்களுக்கு பின்பு சரியான நேரத்தில் ஆன் செய்துள்ளது ஈரான். இன்று காலை அதிகாலையில் ஈரான்மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா!

இதில் முக்கியமாக ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தை தாக்கியுள்ளது. அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியில், ஈரானிலிருந்து ஐஆர்ஜிசி (IRGC) பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு மற்றொரு காரணமும் உள்ளது என ஈரானின் முக்கிய அதிகாரியான முகமது பாகர் காலிபாஃபிற்கு நெருக்கமான ஒரு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து வெள்ளை மாளிகையில் இன்று டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது, இதை முறியடிக்கும் வகையில் ஈரான் ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தை தாக்கியுள்ளது.

Also Read

மேலும் ஈரான் - ஒமன் மத்தியில் தற்போது முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த பேச்சுவார்த்தை துவங்கியதில் இருந்து அமெரிக்கா, ஈரான் தனது பிடிக்கு வந்துவிட்டதாக கருதுகிறது. இதை உடைக்கும் வண்ணமாகவே இத்தாகுதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் கருது நிலவுகிறது.

ஈரான் தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரையில் உயர்ந்து 88 டாலரை தாண்டியது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 83 டாலரை தாண்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+