ஈரான் பேச்சுவார்த்தையில் திடீர் டிவிஸ்ட்.. டோல் கட்டண விவகாரத்தில் புது அப்டேட்.. சொன்னது யார் தெரியுமா?

உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அமெரிக்கா - ஈரான் போரில் சிக்கிக்கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணை திறப்பது குறித்து மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தை ஈரான் - ஓமான் மத்தியில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக ஹார்முஸ் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களிடமும் அதன் சரக்கு மதிப்புக்கு 7 சதவீத தொகையை சுங்க கட்டணமாக ஈரான் வசூலிக்க திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக ஓமான் வாயிலாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பலதரப்பில் இருந்து தகவல் வெளியானது.

ஈரான் பேச்சுவார்த்தையில் திடீர் டிவிஸ்ட்.. டோல் கட்டண விவகாரத்தில் புது அப்டேட்.. சொன்னது யார் தெரியுமா?

மேலும் இந்த டோல் கட்டணம் மூலம் ஈரான் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை சம்பாதிக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது இதில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான இஸ்மாயில் பாகாயி-யிடம் செய்தியாளர்கள் ஹார்முஸ் வழித்தடத்தில் வசூலிக்கப்படும் டோல் கட்டணம் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததா..? டோல் கட்டணம் ஈரானுக்கு மட்டுமே சேருமா அல்லது ஒமன் உடன் பங்குப்போட்டுக்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் கூறிய இஸ்மாயில் பாகாயி தற்போது இரு நாடுகளும் டோல் கட்டணம் குறித்து எவ்விதமான பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை, தற்போது எந்த வழித்தடத்தில் கப்பல்கள் செல்ல வேண்டும், புதிய வழித்தடம் ஆகியவற்றை குறித்து மட்டுமே பேசப்பட்டு வருகிறது என தெரிவித்தார். விரைவில் ஹார்முஸ்-ல் சரக்கு கப்பல் செல்வதற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கான மேப் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இரு நாடுகளும் மிகவும் அமைதியான முறையில், சரியான புரிதலுடன் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில் தற்போது சில முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு விரைவில் இரு தரப்பு ஒப்புதலுடன் அறிக்கை வெளியிடப்படும் என இஸ்மாயில் பாகாயி தெரிவித்தார்.

அடுத்தாக எந்தொரு நாடு கடல்சார் போக்குவரத்து சேவை அளித்தாலும் அதற்கான கட்டணத்தை வசூலிக்கப்பட வேண்டும், ஆனால் இதற்கான முடிவை பின்னால் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் இறுதியாக ஹார்முஸ் திறக்கப்பட வேண்டுமாயின் அமெரிக்க கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்பட்டு பெசியன் வளைகுடாவை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதேவேளையில் தான் ஈரான் நாடாளுமன்றத்தில் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல் செல்வதற்கு தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் அமெரிக்காவும் சரி, ஈரானும் சரி போர் முடிந்தாக இதுவரையில் அறிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+