Code 100.. ஈரான் வெளியிட்ட உச்சகட்ட உத்தரவு.. அனைத்து படைகளும் அலர்ட்! அமெரிக்காவின் மெகா தாக்குதல் திட்டம்!

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் பாப் அல் மண்டெப் வழித்தடத்தை முடக்கி, கிழக்கு மேற்கு பைப்லைன் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியது மூலம் உலக நாடுகளுக்கான எண்ணெய் சப்ளை மொத்தாமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2 நாள் கேம் டேவிட்-க்கு சென்ற டிரம்ப், அவசர அவசரமாக சனிக்கிழமை இரவே திரும்பி வந்துள்ளார். இதேபோல் அடுத்தடுத்து அமெரிக்கா பாதுகாப்பு துறை தலைவர் பீட் செகத், இஸ்ரேல் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் பயணிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்ட நிலையில் பதற்றம் அதிகமாகியுள்ளது.

Code 100.. ஈரான் வெளியிட்ட உச்சகட்ட உத்தரவு.. அனைத்து படைகளும் அலர்ட்! அமெரிக்காவின் மெகா தாக்குதல் திட்டம்!

ஈரான் தனது ஆயுதப்படைகளுக்கு Code 100 என்ற மிக உயரிய எச்சரிக்கையை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நாட்டின் IRGC படைகள், ஈரான் ராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் உச்சக்கட்ட தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டு உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி சவுதி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகள் மீது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என CNN தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க சவுதி தொடர்ந்து அமெரிக்காவிடம் உதவி கேட்டு வரும் வேளையில் இந்த தாக்குதல் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் இந்த வார வீக்எண்ட்-ல் கேம்ப் டேவிட்க்கு சென்ற நிலையில் அங்கு யெமன் நாட்டில் தாக்குதல் நடத்துவதற்காக பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாலும், அதை உடனே செயல்படுத்த வேண்டும் என திட்டமிட்டதாலும் கேம்ப் டேவிட் பயணத்தை விரைவாக முடித்துக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் ஞாயிற்றுக்கிழமை டிரம்ப், பீட் செகத் உடன் வாஷிங்கடன் புரப்பட உள்ளார். இதுமட்டுமா டிரம்ப்-ஐ போலவே இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகும் தனது அமெரிக்க பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்கு திரும்பியுள்ளார். மேலும் டெக்சாஸ்-க்கு திட்டமிட்ட பயணத்தையும் பெஞ்சமின் நெதன்யாகும் ரத்து செய்துள்ளார். இது அனைத்தும் ஒரே இரவில் நடந்துள்ளது என்பது தான் தற்போது உலக நாடுகள் விவாதிக்கும் முக்கிய விஷயமாக உள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் புதிய பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக இஸ்ரேல், சவுதி அரேபியா, ஈராக், லெபனான், ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் STEP பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.

மேலும் அமெரிக்கர்கள் இவ்வழித்தடத்தில் பயணிக்க கூடாது எனவும், எனர்ஜி கட்டமைப்புகள் மீது கூடுதல் பாதுகாப்பை கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இத்தாலி தூதரகம் ரியாத்-ல் உள்ள அந்நாட்டினரை உச்சபட்ட எச்சரிக்கையுடன் இயங்க தெரிவித்துள்ளது.

மேலும் வியாழக்கிழமை டிரம்ப் பேசியபோது, ஈரான் போரில் முக்கியமான திருப்புமுனை நெருங்கி வருவதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் என்பது ஈரான் மீது நடக்குமா அல்லது ஹவுதி படைகள் மீது நடக்குமா என்பது தான் தற்போதை கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+