அமெரிக்கா , இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்டார். கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரான் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க நாடு முழுவதும் பேரணியாக சென்றனர்.
கமேனியின் படுகொலையால் கொத்திப்படைந்த ஈரான் ராணுவம் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. 28ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை அடுத்து கமேனி தன்னுடைய அலுவலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கமேனி மற்றும் அவர் உடன் இருந்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரான் நாட்டு ஊடகங்களும் கமேனி கொல்லப்பட்டதை உறுதி செய்தன. இதனை அடுத்து ஈரான் முழுவதும் 40 நாட்களுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 7 நாட்கள் அரசு விடுமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் ஈரான் நாட்டு அரசு கமேனிக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவித்திருந்ததது.

கமேனியின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெஹ்ரானி கொமேனி தொழுகை மண்டபத்தில் உடல் வைக்கப்படும் என்றும் அதன் பிறகு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. ஒருபுறம் இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதல் தொடர்கிறது என்பதாலும் கமேனியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்பதாலும் திடீரென ஈரான் அரசு தங்களுடைய முடிவை மாற்றி அமைத்து இருக்கிறது.
தற்போதைக்கு அவருடைய இறுதி ஊர்வலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கமேனியின் இறுதி ஊர்வலத்திற்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் அமைதியான முறையில் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செல்வதை உறுதிப்படுத்தவும் இந்த நிகழ்வுகளை தள்ளி வைத்திருப்பதாக ஈரான் நாட்டு அரசு கூறுகிறது.
கிட்டதட்ட 36 ஆண்டுகளாக ஈரானின் அசைக்க முடியாத தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய கூட்டுறவு ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார். கமேனியின் குடும்பத்தில் அவரது மகன் மொஜ்தபாவரை தவிர அனைவருமே கொல்லப்பட்டுள்ளனர். இப்போ நாட்டின் தலைவராகவும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் தலைவராகவும் மொஜ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications