இனி எண்ணெய்க்கும் காசு.. டேட்டாவுக்கும் காசு.. ஈரான் அறிவிப்பால் கூகுள், மெட்டா, அமேசான் ஷாக்..!!

ஈரான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான ரெசாயி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது போர் தொடங்கினால் வளைகுடாவில் இருக்கும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகளைத் தாக்குவதைத் தாண்டி ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடலுக்கு அடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்கள், வளைகுடா நாடுகளில் இருக்கும் டேட்டா சென்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மையங்களை ஏவுகணை கொண்டு அழிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று மற்றொரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் அரசு ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலித்து வரும் வேளையில், இனி வரும் காலகட்டத்தில் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கடலுக்கு அடியில் செல்லும் இண்டர்நெட் கேபிள்கள் மூலம் அனுப்பும் டேட்டாவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

இனி எண்ணெய்க்கும் காசு.. டேட்டாவுக்கும் காசு.. ஈரான் அறிவிப்பால் கூகுள், மெட்டா, அமேசான் ஷாக்..!!

அமெரிக்க டெக் நிறுவனங்களான கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்டவை ஈரானிடம் அனுமதி பெற்ற பின்பு தான் பயன்படுத்த வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு விதிக்க ஈரான் நடவடிக்கை எடுத்து வருவதாக தஸ்னிம் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் அனுமதி பெறும் போது கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற விதியையும் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.

ஹார்முஸ் நீரிணை வழியாக FALCON மற்றும் Gulf Bridge International ஆகிய 2 முக்கிய இண்டர்நெட் கேபிள் உள்ளது. இந்த கேபிள் வளைகுடா நாடுகளை ஆசிய நாடுகளுடன் இணைக்கிறது என்பதால் அனைத்து டெக் நிறுவனங்களுக்கும் இது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

மேலும் இந்த 2 இண்டர்நெட் கேபிளும் ஈரான் நாட்டின் கடலுக்கு அடியில் அமைந்திருப்பதால், அவற்றின் மீது விதிமுறைகளை விதிக்கும் அதிகாரம் இருப்பதாக ஈரான் கூறுகிறது. ஆனால் இதை டெக் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறது.

உலகளவில் தற்போது பெரும்பாலான டேட்டா அனைத்தும் கிளவுட் வாயிலாகச் சென்றாலும், இதற்கான அடிப்படை கட்டமைப்பு என்பது UnderSea கேபிள் தான். உலகளாவிய டேட்டா பரிமாற்றத்தில் சுமார் 99 சதவீத டேட்டா இத்தகைய கேபிளில் தான் செல்கிறது.

நேற்று ஈரான் அரசு இந்த 2 டிரில்லியன் டாலர் UnderSea கேபிள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்த 24 மணிநேரத்தில் கட்டணத்தை விதிக்கும் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+