ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் முடிவுக்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடர்கிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகள் உடனான கடல் வழி போக்குவரத்து மற்றும் வான் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து மட்டும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மற்றபடி எந்த நேரமும் வெடிகுண்டு சத்தத்துடனே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களுக்கு கூட போர் நீடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் தாங்கள் விரும்பிய மாற்றம் வரும் வரை இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலை நிறுத்துவதாக தெரியவில்லை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் மாறி மாறி ஈரானின் ராணுவ கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதை நடத்தி வருகின்றன. இந்த வீடியோக்களை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவங்களே வெளியிட்டு வருகின்றன. எந்தெந்த இடங்களில் எல்லாம் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது எந்தெந்த இலக்குகளை எல்லாம் அழித்தோம் என்பதை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றன.

இந்த வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈரானுக்கு சொந்தமான எம்ஐ -17 என்ற ஹெலிகாப்டரை குண்டு வீசி அழித்ததாக ஒரு வீடியோ வெளியிட்டது. ஏராளமானவர்கள் அந்த வீடியோவை ஆய்வு செய்து இது உண்மையான ஹெலிகாப்டரே கிடையாது என கூறினர்.
வானத்திலிருந்து பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போல் தெரியக்கூடிய இது ஒரு ஓவியம் எனக் கூறினர். அதாவது ஈரான் பல்வேறு இடங்களிலும் ஹெலிகாப்டர் , போர் விமானம் போன்றவற்றை anamorphic painting முறையில் வரைந்துள்ளது. இவை உண்மையான ராணுவ ஹெலிகாப்டர் என நினைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஏமாந்து அவற்றின் மீது தாக்குதல் நடத்துகின்றன என பலரும் கூறினர்.
இது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்திய நிலையில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. ஜிபிஎஸ் பிரஸ் என்ற எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அதில் அமெரிக்கா ஈரானில் தாங்கள் தாக்கியதாக கூறப்படும் ஆயுதங்கள் இவைதான் எனக் கூறியிருக்கிறது. இவை அனைத்துமே Inflatable model weapons. அதாவது உண்மையான டேங்குகளோ ஆயுதங்களோ கிடையாது வெறும் காற்று அடிக்கப்பட்ட பலூன்.
ஈரான் சீனாவிடம் இருந்து கிட்டத்தட்ட 9 லட்சம் Inflatable model ஆயுதங்களை இறக்குமதி செய்து பல்வேறு இடங்களில் நிறுத்தியிருக்கிறதாம். ராணுவ டாங்கிகள், ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடிய நவீன வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவை போலவே இவை காட்சி தருகின்றன. அருகில் சென்று பார்த்தால் தான் இது உண்மையான ஆயுதங்கள் அல்ல இவை வெறும் காற்றடிக்கப்பட்ட பலூன்கள் என்பது தெரிய வரும்.
ஜிபிஎக்ஸ் அமெரிக்கா ஈரானில் இதன் மீது தான் தாக்குதல் நடத்துகிறது என கூறுகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய ஒரு வீடியோ தான், இதன் உண்மை தன்மையை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏராளமான பயனர்கள் அமெரிக்க ராணுவம் பல லட்சம் கோடிகளை செலவு செய்து வெறும் பலூன்கள் மீது தான் தாக்குதல் நடத்துகிறதா என ஏராளமானவர்கள் கிண்டல் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நவீன ஆயுதங்களை கொண்டு பல லட்சம் கோடிகள் செலவு செய்து தாக்கல் நடத்தினால் சிம்பிளாக ஒரு பலூனை கொண்டு ஈரான் பிரச்சனையை முடித்து விட்டது என ஏராளமானவர்களும் பதிவு செய்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications