இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிரமாக ஈரானின் பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய தாக்குதல் இன்னமும் முடிந்தபாடில்லை. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வரக்கூடிய சூழலில் தான் இந்த முறை மிகத் தீவிரமாக ஈரான் மீது போர் தொடுத்திருக்கிறது இஸ்ரேல்.

டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களையும் குறிப்பாக ஈரான் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தும் முக்கிய அதிகாரிகள் இருக்கக்கூடிய கட்டிடங்களை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தை ஏமாற்றும் வகையிலான சில வேலைகளில் ஈரான் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஈரானுக்கு சொந்தமான எம் ஐ 17 ஹெலிகாப்டர் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். மேலே இருந்து குண்டு வீசக்கூடிய அந்த வீடியோவை இஸ்ரேல் ராணுவமே வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்த வீடியோ தான் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது.

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

பேட்ரீசியா மரின்ஸ் என்பவர் ஒரு தனிப்பட்ட ஆய்வாளர். பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மிக முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதாவது இஸ்ரேல் ராணுவம் ஈரான் போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் என நினைத்து பெயிண்டிங் அதாவது வெறும் ஓவியங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

வானில் இருந்து பார்ப்பதற்கு உண்மையான பொருட்களைப் போலவே தெரியும் anamorphic painting வகையிலான ஓவியங்களை கொண்டு ஈரான் புது போர் யுக்தியை கையில் எடுத்துள்ளது என்கிறார். அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஏமாற்றும் நோக்கில் ஈரான் பல்வேறு இடங்களில் தரையில் இது போன்ற ஓவியங்களை பயன்படுத்துகிறது என கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பாருங்கள் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் என கூறப்படும் இந்த வீடியோவில் அவர்கள் தாக்கியது உண்மையில் ஹெலிகாப்டர் அல்ல ஒரு ஓவியம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு உக்ரைன் போரில் அமெரிக்க செயற்கைக்கோள்களில் கோள்களை ஏமாற்றுவதற்காக ரஷ்யா இதே டெக்னிக்கை தான் பயன்படுத்தியது என கூறியிருக்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்தும் தாக்குதல்களில் பெரும்பாலானவை இது போன்ற ஓவியங்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன எனக் கூறும் அவர் ஈரான் நீண்டகால மோதலுக்கு மறைமுகமாக தயாராகி வருவதை இது காட்டுவதாக தன்னுடைய பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல், ஈரான் ராணுவத்தின் கட்டமைப்புகளை வான்வெளி தாக்குதல் மூலம் அழித்து வருகிறோம் என தொடர்ச்சியாக கூறிவரக் கூடிய சூழ்நிலையில் தான் இந்த ஓவியங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது செயற்கைக்கோள் உளவு மற்றும் வான்வெளி தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும் எதிரி நாட்டுப் படையினரை குழப்புவதற்கும் அவர்களின் வெடிபொருட்களை வீண் செய்வதற்காகவும் இதுபோன்ற ஓவியங்களை போர்க்காலங்களில் பயன்படுத்துவார்கள். இவை வானத்திலிருந்து பார்ப்பதற்கு உண்மையான ராணுவ உபகரணங்களை பிரதிபலிக்கும் வகையில் வரையப்படும். இதுவும் ஒரு போர் யுக்தி என்றும் இது எதிரிகளின் வெடிபொருட்களை விரைவாக காலி செய்து அவர்களை பலவீனப்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+