அமெரிக்கா - ஈரானுக்கு மத்தியிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று ஈரான் மீது இதுவரையில் எந்த நாடும் பார்த்திடாத பொருளாதார நெருக்கடியை விதிக்க அமெரிக்க தயாராகி வருகிறது. இதற்கான செய்தியாளர்கள் கூட்டம் இன்று அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் ஈரானில் புதிய எரிவாயு தளம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Fars மாகாணத்தில் 200 பில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா உடனான போரில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்நாட்டின் ஏற்றுமதி மொத்தமாக முடங்கியிருக்கும் நிலையில் இந்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டின் பெட்ரோலிய துறை அமைச்சரான மோசின், அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த முக்கிய பேட்டியில் இந்த புதிய எரிவாயு தளம் கண்டுபிடிக்கப்பட்டதை தெரிவித்தார். இப்புதிய தளத்தில் இருந்து 160 பில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான எரிவாயுவை எடுக்க முடியும் என்றும் மோசின் தெரிவித்தார்.
உலக நாடுகள் எரிவாயு தட்டுப்பாட்டில் தவித்து வரும் வேளையில் ஈரானுக்கு கிடைத்துள் இப்புதிய எரிவாயு தளம் உலக நாடுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் Fars மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு ஸ்வீட் இயற்கை எரிவாய வகையைச் சேர்ந்தது என ஈரான் தெரிவித்துள்ளது.
இதனால் இதற்கான சுத்திகரிப்பு செவவு மிகவும் குறைவு என்பதால் அதிக விலைக்கும் விற்க முடியும், இதேபோல் உலக நாடுகள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட்-ம் இருக்கும்.
ஆனால் அமெரிக்கா உடனான போரில் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானின் நிதி நிலை கடுமையாக பாதிக்குப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக உற்பத்தியை துவங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications