குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சில பிரிவுகளில் தீப்பிடித்ததுள்ளது. குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) வெளியிட்ட அறிக்கையின்படி, தீயணைப்பு குழுக்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தின.
இதேவேளையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில யூனிட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் நடந்த பாதிப்பு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

குவைத் அரசு ஊடகமான குவைத் நியூஸ் ஏஜென்சி (KUNA) வெளியிட்டுள்ள தகவலின், வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரான் நாட்டின் பல ட்ரோன்கள் மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தின.
இதனால் சில சுத்திகரிப்பு செயல்பாட்டு பிரிவுகளில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சில பிரிவுகள் மூடப்பட்டன. இது குவைத்தின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தற்காலிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக முடப்படவில்லை என்பதையும் விளக்கியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாகவும், வளைகுடா நாடுகளில் முழுவதும் இருக்கும் அமெரிக்க படைகளை தாக்கும் விதமாக ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் குவைத் நாட்டை தனியாக குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. வளைகுடா பகுதி முழுவதிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும வளைகுடா பகுதியில் இருக்கும் மற்ற நாடுகளை போல் குவைத்தின் ராணுவமும் ஏவுகணை மற்றும் ட்ரோன்-களுக்கு எதிராக வான்பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தி எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பஹ்ரைனில் பாதிப்பு
பஹ்ரைனில் ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட ஷார்ப்னல் (ஏவுகணை பாகம்) ஒரு கிடங்கில் விழுந்து தீப்பிடித்தது. உள்துறை அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியது. தீயை விரைவாக கட்டுப்படுத்திய காரணத்தால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications