இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது உலக அளவில் நாடுகளில் பெட்ரோல்,டீசல் மற்றும் எரிசக்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. உலக எரிசக்தி சந்தையே கிட்டத்தட்ட ஆட்டம் கண்டு நிற்கிறது. உலக நாடுகளுக்கு குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு தேவையான 60 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய், எல்பிஜி ஆகியவை வளைகுடா நாடுகளிலிருந்து தான் வாங்கப்படுகின்றன.

வளைகுடா நாடுகளில் இந்த கப்பல்களில் கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி போன்றவற்றை ஈரானுக்கு அருகே இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வெளியே வர முடியும். போரை காரணமாக கூறி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தங்கள் அனுமதி இல்லாமல் எந்த ஒரு சரக்கு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தால் அந்த கப்பல்களை வீழ்த்துவோம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

எனவே முன்னெச்சரிக்கையாக நிறுவனங்கள் கப்பல்களை வளைகுடா நாடுகளிலேயே நிறுத்தி வைத்திருக்கின்றன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருப்பதால் இந்தியாவிற்கு எல்பிஜி, கச்சா எண்ணெய் உள்ளிட்டவை வரவில்லை. அண்டை நாடுகளுக்கும் இதே நிலைமை தான். இந்த சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் ஈரானை வலியுறுத்தி வருகின்றன.

Also Read

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் போக்குவரத்துக்கு வழி வகை செய்யவில்லை என்றால் ஈரானின் மின் நிலைய கட்டமைப்புகளை அழிப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு 48 மணி நேர கெடுவும் விதித்திருந்தார். இந்த சூழலில் தான் ஈரான் ஹார்முஸ்ஸ் ஜலசந்தி விவகாரத்தில் மனமிறங்கி வந்திருக்கிறது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல்கள் பயன்படுத்த அனுமதிக்கிறோம் ஆனால் எங்களுடைய சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

தங்களுடைய எதிரி நாடுகளுக்கு சொந்தமில்லாத மற்றும் எதிரி நாடுகளோடு தொடர்பில்லாத கப்பல்களை நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து செல்ல தொடர்ந்து அனுமதிப்போம் என ஐநா கடல் வழி போக்குவரத்து முகமைக்கான ஈரான் நாட்டு பிரதிநிதி அலி மௌசாவி தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி அனைவரும் பயன்படுத்தும் நிலையில் தான் இருக்கிறது, இந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய கப்பல்கள் முன்னதாக ஈரான் அரசின் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கூறியிருக்கிறது.

அதாவது ஈரான் அரசின் அனுமதி பெற்றுக் கொண்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம் என்பதுதான் அவர் கூற வரக்கூடிய செய்தி. அதேவேளையில் ஈரான் அரசு தங்களுக்கு எதிரி என வரையறுத்துள்ள நாடுகள் , அந்த நாடுகளோடு தொடர்புடைய நிறுவனங்களின் கப்பல்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டின் கொடி ஏந்திய கப்பல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளோடு தொடர்புடைய நிறுவனங்களின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாது.

Recommended For You

இந்தியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே எல்பிஜி உள்ளிட்ட பல்வேறு தட்டுப்பாடுகளை இந்தியா சந்தித்து இருக்கக்கூடிய நிலையில் கப்பல்களை அனுமதிப்பதன் மூலம் பழையபடி இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கிடைக்கும் இது உள்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு உதவும. அதே வேளையில் சர்வதேச கடல்வழி போக்குவரத்து அமைப்போடு இணைந்து செயல்படுவதற்கு ஈரான் தயாராக இருக்கிறது என தெரிவித்திருக்கிறது. கடல்வழி சரக்கு போக்குவரத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாலிமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் பதில் என்பதுதான் ஈரானும் விரும்புகிறது என கூறியிருக்கிறது.

எனவே ஈரானின் அனுமதியோடி படிப்படியாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் அனுமதிக்கப்படும் போது இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய்யும் எல்பிஜியும் பிரச்சினை இல்லாமல் கிடைக்க தொடங்கும். சாமானிய மக்களுக்கு இது பெரிய பலனை தரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+