இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரானின் திடீர் மனமாற்றம்..!!

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தொடங்கியது முதல் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் ஈரான் அரசு இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.

ஈரான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவின் துணை தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம், போர் பதற்ற சூழலுக்கு மத்தியில் வணிக கப்பல் போக்குவரத்துகளின் மீதான கட்டுப்பாடுகளுக்கு சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியே வணிக கப்பல்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியா உட்பட நான்கு நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரானின் திடீர் மனமாற்றம்..!!

இந்தியா, சீனா, ஈராக், கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், இந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க படைகள் இந்த கப்பல்களை இடைமறித்து தாக்காது என கூறியுள்ளார்.

ஈரானில் இந்த போர் காரணமாக கடுமையான பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக உலக நாடுகளிடம் இருந்து , அத்தியாவசிய மருந்துகள் கூட ஈரானுக்கு வரவில்லை. இதனால் மருத்துவ துறை மற்றும் மருந்து தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியாவிடமிருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஏதுவாகவே இந்திய கப்பல்களுக்கு ஈரான் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Also Read

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் ஈரான் நெருக்கடிகளை சந்தித்து வரும் வேளையில், வர்த்தகம் மற்றும் எரிசக்தி துறையில் முக்கிய கூட்டாளியாக உள்ள சீனா உடன் ராஜதந்திர ஆதரவு பெறுவதற்கு ஈரான் சீன நாட்டு கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி தந்துள்ளது.

இதனால் ஹார்முஸை இந்திய கப்பல்கள் இலவசமாக கடந்துவிட முடியாது. ஈரானுக்கு போக்குவரத்து கட்டணம் செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. கப்பல்கள் மீது தாக்குதல்கள் இருக்காது என்ற உறுதியை தான் ஈரான் தந்துள்ளது. அதே வேளையிக் கத்தார் நாட்டுக்கு சொந்தமான கப்பல்கள் எந்த விதமான கட்டணமும் இன்றி இலவசமாக ஹார்முஸ் வழியே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

Recommended For You

கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் மீது தொடுத்த தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் வழியே சரக்கு , எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், சர்வதேச வணிக கப்பல்கள் குறிவைக்கப்படுவது குறித்து இந்தியா தனது கடும் கவலையை தெரிவித்துள்ளது.

மேலும், கப்பல்கள் தாக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சர்வதேச சட்ட விதிகளின்படி சர்வதேச நீர் வழிகளில் எப்படி கட்டணமின்றி சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கப்பல்கள் பயணிக்க முடியுமோ, அந்த நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+