மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பிரச்சனை காரணமாக, உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான Strait of Hormuz-ஐ மொத்தமாக ஈரான் கைப்பற்றியிருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையில் பெரும் தடை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உலக நாடுகள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் வேளையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு ஈரான் சில நாடுகளுக்கான கப்பலை அனுமதிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் ஈரான் நடுக்கடலில் டோல் பூத் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த டோல் பூத்-ல் பணத்தை கட்டினால் தான் கப்பல் ஹார்மூஸ் வழித்தடத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலை உள்ளதாக அமெரிக்கா மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.
டோல் பூத்
ஈரான் நாட்டின் முக்கிய பாதுகாப்பு படையாக இருக்கம் Islamic Revolutionary Guard Corps (IRGC) ஹார்முஸ் நீர்வழி பாதையில் 'டோல் பூத்' போன்ற கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்தியுள்ளதாக சர்வதேச கப்பல் தகவல் தளம் Lloyd's List வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இந்த அறிக்கையின்படி, கப்பல்கள் அந்த வழியாக செல்லும் முன் முழுமையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு அனுமதி குறியீடு (clearance code) பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்ற கப்பல்கள் IRGC பாதுகாப்பில் குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் மட்டுமே கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையை பின்பற்றி பயணித்துள்ளதாகவும், மார்ச் 15க்கு பிறகு வழக்கமான பாதையில் எந்த கப்பலும் Automatic Identification System (AIS) தரவுகளில் படி பயணித்தாக பதிவாகவில்லை என்றும் Lloyd's List-ன் இன்டலிஜென்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு மறுத்துள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில், ஹார்முஸ் நீர்வழி பாதையில் கப்பல்களுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றும், இத்தகைய தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளது.
இத்துறையின் சிறப்பு செயலாளராக இகுக்கும் ராஜேஷ் சின்ஹா, சர்வதேச கடல் சட்டங்களின் படி ஹார்முஸ் பாதை 'நாவிகேஷன் சுதந்திரம்' (Freedom of Navigation) உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த நாடும் தனிப்பட்ட கட்டணங்களை விதிக்க முடியாது என்றும் விளக்கமளித்துள்ளார்.
ஈரானின் நிலைப்பாடு
ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரான அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi), எங்களுடைய நட்பு நாடுகளுக்கான கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டின் மும்பை துணை தூதரகம் வெளியிட்ட தகவலும் இதை உறுதிப்படுத்துகிறது.
உலக வர்த்தகத்துக்கு தாக்கம்
ஹார்முஸ் நீர்வழி பாதை உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக இருப்பதால், இப்பாதையில் ஏற்படும் கட்டுப்பாடுகள் எரிபொருள் விலைகளை உயர்த்தி, சர்வதேச வர்த்தகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் போரின் தீவிரத்தின் அடிப்படையிலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் டோல் பூத் மூலம் IRGC கட்டுப்பாடுகள் உண்மையாக இருந்தால், அது கப்பல் போக்குவரத்து செலவை உயர்த்தி, இறுதியில் எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும். அதே சமயம், இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவது குறுகிய கால நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!



Click it and Unblock the Notifications